வாதநோய் எதிர்ப்பு மருந்து
Appearance
வாதநோய் எதிர்ப்பு மருந்துகள் அல்லது நோய் தணிக்கும் வாதநோய் எதிர்ப்பு மருந்துகள் [Disease-modifying antirheumatic drugs (DMARDs)] என்பவை முடக்குவாத நோய் தீவிரமடைவதைத் தடுக்க உபயோகிக்கப்படும், வேறுவகையில் தொடர்பற்ற, மருந்துகளின் பகுப்பாகும்[1][2]. வாதநோய் எதிர்ப்பு மருந்துகள் என்னும் சொல், இஸ்ட்டீராய்டு கலக்கப்படாத அழற்சி மருந்துகள் (அழற்சி உருவாவதற்கானக் காரணங்களைத் தணிக்காமல், அதனால் ஏற்படும் விளைவுகளைத் தணிக்கும் வேதிப்பொருள்கள்), இஸ்ட்டீராய்டுகள் (நோய் தீவிரமடைவதைத் தடுக்க இயலாத, ஆனால் நோயெதிர்ப்பு வினைகளைத் தணிக்கக்கூடியவை) ஆகியவற்றை குறிக்க, முரண்பாடாக உபயோகப்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற ஒரேமாதிரியான சூழல்களில் மருந்தின் விளைவுகளைக் குறிப்பிடாமல், வாதநோய் எதிர்ப்பு என்னும் சொல் பயன்படுத்தப்படலாம்[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் disease-modifying antirheumatic drug
- ↑ "Disease modifying antirheumatic drugs (DMARDs)". Archived from the original on 2009-04-26.
- ↑ டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் antirheumatic