வாணராயன் (வள்ளல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்கு மண்டலத்தில் வாணராயன் என்னும் வள்ளல் வாழ்ந்துவந்தான். அவனைத் தேடி வரும் புலவர்கள் தமக்கு வேண்டுவனவற்றை வாயால் கூறவேண்டியதில்லை. பனை ஓலை ஏட்டில் எழுதித் தொங்க விட்டாலே போதும். அரிதின் முயன்று தேடிக் கொண்டுவந்து அன்போடு வழங்குவான். மேலும் "இங்கு மீண்டும் வருக" என்று கூறுவான். இவன் பவளநிற ஆடையும், மாலையும் அணிபவன். இவனைப்பற்றிக் கொங்கு மண்டல சதகம் நூலில் உள்ள பாடல் ஒன்று தெரிவிக்கிறது.[1][2]

மேற்கோள்[தொகு]

  1. தொங்க வைத்துள்ள பனையேட்டில் வாயில் சொலாது எழுதி
    அங்கு வைத்தால் அதில் கண்டதை அன்பின் அரிதின் நல்கி
    இங்கு மற்றும் வருவீர் புலவீர் என்று இசை பவள
    அங்கிசத்தார் வாணராயனும் வாழ் கொங்கு மண்டலமே. 96

  2. கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை பக்கம் 152-154
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணராயன்_(வள்ளல்)&oldid=2716696" இலிருந்து மீள்விக்கப்பட்டது