வாடி வாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாடி வாசல் என்பது ஏறு தழுவல் அல்லது ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது பந்தயக் காளைகள் வெளிப்படும் வாசலாகும். திட்டி வாசல் சிறு நுழைவு வாயில் என்று பொருள் படுகிறது. [1] இவ்வாறு வெளிப்படும் காளைகள் முரட்டுத்தனமான இப்போட்டிக்காகவே பழக்கப்பட்ட காளைகளாகும். இக்காளைகளின் கொம்புகளில் அல்லது கழுத்தில் பரிசுப் பொருட்களைக் கட்டி இருப்பார்கள். காளையினை அடக்கி வெற்றி பெறும் வீரர் பரிசினைப் பெறுவார். தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஏறுதழுவல் என்னும் இந்த வீர விளையாட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முன்பு மணமகனைத் தேர்ந்து எடுக்கவும் இவ்விளையாட்டு பயன்பட்டதுண்டு.

ஆதாரங்கள்[தொகு]

  1. [http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=171&pno=404 நல்ல தமிழ் எழுத வேண்டுமா? ]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடி_வாசல்&oldid=3636795" இலிருந்து மீள்விக்கப்பட்டது