வாடிநார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
தோற்றம்
வாடிநார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Vadinar Refinery), இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் கச்சு வளைகுடாவில் உள்ள வாடிநார் சிற்றூரில் அமைந்த பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகும். எஸ்ஸார் எரிசக்தி நிறுவனத்தின் கீழ் செயல்படும் நயாரா எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான வாடிநார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை 2006ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இவ்வாலை ஆண்டிற்கு 20 மில்லியன் டன்கள் (நாள் ஒன்றுக்கு 405,000 பீப்பாய்கள்) பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. இதுவே இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகும்.[1]
தடை
[தொகு]நயாரா நிறுவனத்தின் வாடிநார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் இறக்குமதிக்கு தடை செய்துள்ளது.[2][3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Second largest oil refinery in India | Nayara Energy". www.nayaraenergy.com (in ஆங்கிலம்). Retrieved 2021-09-27.
- ↑ India`s Nayara trims crude processing rates after EU sanctions India`s trims crude processing rates after EU sanctions
- ↑ Supertanker delivers oil to sanctioned Nayara Energy's Vadinar refinery, sources say