வாடிநார்
வாடிநார்
વાડીનાર | |
|---|---|
சிற்றூர் | |
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வாடிநார் கிராமத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 22°24′N 69°43′E / 22.40°N 69.72°E | |
| நாடு | |
| மாநிலம் | குஜராத் |
| மாவட்டம் | தேவபூமி துவாரகை மாவட்டம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 8,946 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | குஜராத்தி மொழி, ஆங்கிலம், இந்தி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 361010 |
| தொலைபேசி குறியீடு | 02833 |
| வாகனப் பதிவு | GJ-37 |
| அருகமைந்த நகரங்கள் | ஜாம்காம்பாலியம்/ஜாம்நகர் |
| இணையதளம் | gujaratindia |
வாடிநார் (Vadinar), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கச்சு வளைகுடாவில் உள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். வாடிநாரில் நயாரா எனர்ஜி நிறுவனத்தின், இந்தியாவின் இரண்டாவது பெரிய பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது.[1]மேலும் வாடிநாரில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் எஸ்ஸார் குழுமத்தின் பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளது. மேலும் வாடிநாரில் பாரத்-ஓமன் கூட்டுறவில் இயங்கும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. வாடிநாரில் உப்பு தயாரிக்கும் உப்பளங்கள் அதிகம் உள்ளது.
துறைமுகம்
[தொகு]வாடிநார் அருகே கண்ட்லா துறைமுகம் உள்ளது. 25 செப்டம்பர் 2017 அன்று இதன் பெயரை தீனதயாள் உபாத்தியாயா துறைமுகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.[2]
போக்குவரத்து
[தொகு]வாடிநார் சிற்றூருக்கு 47 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜாம்நகரில் வானூர்தி நிலையம்[3] மற்றும் தொடருந்து நிலையம் உள்ளது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வாடிநார் சிற்றூரின் மொத்த மக்கள் தொகை 8,946 ஆகும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India's Second largest oil refinery- Nayara Energy". www.nayaraenergy.com (in ஆங்கிலம்). Archived from the original on 23 January 2025. Retrieved 2025-04-28.
- ↑ [ https://www.deendayalport.gov.in/en/ Deendayal Port Authority, Kandla]
- ↑ Jamnagar Airport
- ↑ Jamnagar railway station
- ↑ Vadinar Population - Jamnagar, Gujarat