வாசு (நகைச்சுவை நடிகர்)
தோற்றம்
வாசு | |
|---|---|
![]() | |
| பிறப்பு | வாசு |
| இறப்பு | 17 ஆகத்து 2017 மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1984-2017 |
| வாழ்க்கைத் துணை | அமுதா |
அல்வா வாசு (Halwa Vasu) என அறியப்பட்ட வாசு (இறப்பு:17 ஆகத்து 2017) தமிழ்த் திரைப்படங்களில் நடித்த நகைச்சுவை, குணச்சித்திர நடிகராவார். சுமார் 900 திரைப்படங்களில் நடித்திருந்தார். அமைதிப்படை திரைப்படத்தில் மயக்க மருந்து கலந்த அல்வா வாங்கி வரும் பாத்திரத்தில் நடித்ததால் அல்வா வாசு எனப் பரவலாக அறியப்பட்டார்.[1] கல்லீரல் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, 17 ஆகத்து 2017 அன்று காலமானார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்". Retrieved 17 ஆகத்து 2017.
- ↑ "நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல் நலகுறைவால் காலமானார்". தினமலர். 17 ஆகத்து 2017. Retrieved 17 ஆகத்து 2017.
