வாசியம்
வாசியம் (Wasium) என்பது இயே. எஃப் பக்கர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட வேதியியல் தனிமத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரு பெயராகும்.[1] [2] சுவீடனின் அரச இல்லமாகக் கருதப்படும் வாசா இல்லம் என்பதிலிருந்து வாசியம் என்ற இந்த பெயர் பெறப்பட்டது.
1862 ஆம் ஆண்டில், பக்கர் நார்வே நாட்டின் தீவான இரான்சோம் தீவிலிருந்து கிடைத்த ஆர்தைட்டு என்றும் அல்லானைட்டு என்றும் அழைக்கப்பட்ட கனிமத்தை ஆய்வு செய்து, அதில் ஒரு புதிய தனிமம் இருப்பதாக முடிவு செய்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் வாசியம் ஆக்சைடு வேறு பல தனிமங்களின் கலவை என்பதைத் தெளிவுபடுத்தும் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. [3] [4] [5]
வாசியம் நார்வே ஆர்தைட்டும் ஆர்தைட்டும் இட்டெர்பை என்ற சுவீடன் நாட்டு கிராமத்தில் இருந்து கிடைத்ததாக பக்கரால் கூறப்பட்டது. ரேன்சோம் தீவிலும் ஆர்தைட்டு இருந்ததாகவும் பக்கர் கூறினார். [6] அலனைட்டின் ஒரு கனிம வடிவமான வாசைட்டு கனிமத்தில் வாசியம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bahr, J. F. (1863). "Ueber ein neues Metalloxyd". Annalen der Physik und Chemie 195 (8): 572. doi:10.1002/andp.18631950804. Bibcode: 1863AnP...195..572B. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k152049.image.f584.langFR.
- ↑ Bahr, J. F. (1864). "Ueber Wasiumoxyd, ein neues Metalloxyd". Journal für Praktische Chemie 91 (1): 179. doi:10.1002/prac.18640910130.
- ↑ Delafontaine, M. (1864). "Ueber das Wasium". Annalen der Chemie und Pharmacie 131 (3): 368–372. doi:10.1002/jlac.18641310316. https://zenodo.org/record/1427233.
- ↑ "Notizen". Journal für Praktische Chemie 91 (1): 316–320. 1864. doi:10.1002/prac.18640910151.
- ↑ "Wasium". Archiv der Pharmazie 170 (3): 254. 1864. doi:10.1002/ardp.18641700345.
- ↑ Samuel Joseph Mackie (1864), The Geologist, Volume 7, பார்க்கப்பட்ட நாள் October 3, 2013
- ↑ Wasium, 1913, பார்க்கப்பட்ட நாள் October 3, 2013