வாசிங்டன் டிசி வானூர்தி விபத்து, 2025
சனவரி 29, 2025 அன்று வாசிங்டன், டி..சி.யில் உள்ள ரொனால்ட் ரீகன் வாசிங்டன் தேசிய வானூர்தி நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்சு வானூர்தியுடன் அமெரிக்க இராணுவ உலங்கூர்தி பொட்டாக் ஆற்றுக்கு மேல் மோதியதில் 67 பேர் இறந்தனர்.[1]
விபத்துக்குள்ளான வானூர்தி ஒகையோவை தலைமையிடமாக கொண்ட பிஎசுஏ ஏர்லைன்சு எண் 5342 ஆகும ஆனால் இது அமெரிக்கன் ஏர்லைன்சின் துணை நிறுவனம். இவ்விபத்தில் ஈடுபட்டது பாம்பார்டியர் வகை வானூர்த்தி ஆகும். உலங்கூர்தி பிளாக் அவாக்-சக்காசுகீ ரகம் ஆகும். 2001, நவம்பர் 12 அன்று 260 பேர் பலியான அமெரிக்கன் ஏர்லைன்சு எண் 587 விபத்துக்கு பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட பெரிய வானூர்தி விபத்து இதுவாகும். பலியான 67 பேரில் 64 பேர் வானூர்தியையும் 3 பேர் உலங்கூர்தியையும் சேர்ந்தவர்கள்.
கேன்சசு மாநிலத்திலுள்ள விச்சிட்டாவில் இருந்து புறப்பட்ட இவ்வானூர்தி இலக்கான ரொனால்ட் ரீகன் வாசிங்டன் தேசிய வானூர்தி நிலையத்தை அடைய அரை மைல் இருக்கும் போது இவ்விபத்து ஏற்பட்டது. மோதிய உலங்கூர்தி வானோடிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.இது பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியாவில் உள்ள டேவிட்சன் இராணுவ தளத்தை சேர்ந்தது
முதற்கட்ட விசாரணையில் உலங்கூர்தி 99 மீட்டர் உயரத்தில் பறந்ததாக தெரிகிறது. ஆனால் ரொனால்ட் ரீகன் நிலையத்துக்கருகே உலங்கூர்திகளக் 61 மீட்டருக்கு மேல் பறக்கக்கூடாது என்ற விதி உள்ளது. வானூர்தியையும் உலங்கூர்தியையும் ஒரே வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார் எனவும் தெரிகிறது. விபத்துக்குள்ளான சமயத்தில் ஒரு கட்டுப்பாட்டாளர் மட்டும் இருந்தது வழக்கத்திற்கு எதிரானது. கட்டுப்பாட்டாளர் இரு முறை வானூர்தி நிலையத்திற்கு வந்து கொண்டிருப்பதாக உலங்கூர்தியை எச்சரித்துள்ளார். விபத்துக்கு இரு நிமிடம் முன்பும முதல் எச்சரிக்கை விடுத்துள்ளார்