வாசவி மொழி
| வாசவி Vasavi | |
|---|---|
| வாசவி பீல் | |
| பிராந்தியம் | மகாராட்டிரம், குசராத்து (இந்தியா) |
| இனம் | வாசவி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 187,000 (2011)e25 |
இந்திய-ஐரோப்பிய மொழிகள்
| |
| தேவநாகரி, குசராத்தி[1] | |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | vas |
| மொழிக் குறிப்பு | vasa1239[2] |
வாசவி மொழி (Vasavi language) என்பது பீல் மக்களால் பேசப்படும் ஒரு மேற்கு இந்தோ-ஆரிய மொழியாகும். இருப்பினும் மேற்கத்திய இந்திய-ஆரிய மொழியான பில்லி மொழியால் புரிந்துகொள்ள முடியாது. வாசவி மொழி பேசும் மக்கள் முக்கியமாக குசராத்து-மகாராட்டிரா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள இரண்டு மாவட்டங்களில் வாழ்கின்றனர். குசராத்தில் உள்ள பரூச் மாவட்டம் மற்றும் மகாராட்டிராவின் துளே மாவட்டம் ஆகியன இம்மாவட்டங்களாகும். குசராத்தின் வடோதரா மாவட்டம் மற்றும் சூரத் மாவட்டத்திலும், தென்மேற்கு மத்தியப் பிரதேசத்திலும் சிறிய அளவில் இச்சமூகத்தினர் காணப்படலாம்.
இம் மொழி பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது: ஆதிவாசி பில், கெசுகி பில் மற்றும் (பத்வி) பிலோரி. மகாராட்டிராவில் பேசப்படும் மராத்தி செல்வாக்கு கொண்ட அம்போடியா, தோக்ரி (டுங்ரி), கட்டலியா, கோட் (கோட்னே) மற்றும் தெக்வாலியா (கோல்ச்சு) ஆகியவை பேச்சுவழக்குகளில் அடங்கும் பட்டியலாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ScriptSource - Gujarati". Retrieved 2017-02-13.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Vasavi". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.