உள்ளடக்கத்துக்குச் செல்

வாசனை சீரகச் சம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசனை சீரகச் சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் இரகம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வாசனை சீரகச் சம்பா (Vasanai Seeraga Samba) இது பாரம்பரிய நெல் இரகங்களில் ஒன்றாகும். இயற்கையாகவே மணம் வீசுக்கூடிய இந்த நெல் வகை, இயற்கை வேளாண் முறையில் பயிரிடப்படுகிறது. துளசி மணம் கொண்ட இந்த சீரக சம்பா நெல்வகைக்கு, இதன் காரணமாகவே வாசனை சீரகச் சம்பா என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

இது எளிதில் ஜீரணிக்கக்கூடிய அரிசி வகையாகவும், இதைச் சாப்பிட்டால் பசி நல்ல எடுக்கும் என்றும், மெலிந்தவர்கள் இந்த துளசி மணம் கொண்ட சீரக சம்பா அரிசியைச் சாப்பிடலாம், உடல் ஆரோக்கிய நிலையில் இருக்கும் அறியப்படுகிறது.

இது வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புடையதாகவும், மேலும் இது நல்ல மகசூல் தரும் நெல் வகையாகவும், காட்டுயானம் நெற்பயிரைப் போல உயரமாக வளரும் எனவும் கூறப்படுகிறது. துளசி மணம் கொண்ட சீரக சம்பா அரிசிச் சோறு இரைப்பை கோளாறுகளை சரிசெய்யும் திறன் கொண்டது என்றும், வாத நோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் இந்த அரிசியைச் சோறை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. [1]

வெளி இணைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Organic Traditional Vasanai Seeraga Samba Raw Rice வாசனை சீரக சம்பா அரிசி". vetha-sorganic.com - © 2024 (ஆங்கிலம்). Retrieved 2025-06-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசனை_சீரகச்_சம்பா&oldid=4290549" இலிருந்து மீள்விக்கப்பட்டது