வாங் ழேன்யி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாங் ழேன்யி (Wang Zhenyi) (எளிய சீனம்: 王贞仪மரபுவழிச் சீனம்: 王貞儀பின்யின்: வாங் ழேன்யி; 1768–1797) ஒரு குவிங் பேரரசு கால அறிவியலாளர் ஆவார்.[1] இவர் வானியல், கணிதவியல், புவிப்பரப்பியல், மருத்துவம் ஆகிய துறைகளில் தன் கடிய உழைப்பால் புலமை பெற்று, பெண்ணுரிமைக்கு முட்டுகட்டையிட்ட தனது கால நிலவுடைமைப் பழக்க வழக்கங்களை உடைத்தெறிந்தார்.[2] இவர் வானியலுக்கும் கணிதவியலுக்கும் கவிதை இலக்கியத்துக்கும் பெரும்பங்கு பற்ரிய வலிய அறிதிறன் வாய்ந்த பெண்ணாகத் திகழ்ந்தார். இவர் 18 ஆம் நூற்றாண்டுச் சீனாவின் அரும்பெரும் பெண் அறிஞராவார்.[3]

வாழ்க்கை[தொகு]

இளமையும் குடும்பமும்[தொகு]

வாங்கின் மூதாதையர் வீடு ஆங்குயி மாகாணத்தில் இருந்தது. ஆனால், இவரது தாத்தா இன்றைய நாஞ்சிங் மாகாணமாகிய யியாங்நிங்குக்கு இடம்பெயர்ந்தது.[1][2] இவர் இளமை முதலே படிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். சிறந்த அறிவாளியாகத் திகழ்ந்துள்ளார்.[1] இவருடைய தாத்தா வாங் ஜெஃபு பெஸ்சன் மாகாணத்திற்கும் சுவான் ஹவா மாவட்டங்களுக்கு ஆளுநராக இருந்தவா், வாசிப்பதில் மிகுந்த ஆா்வம் கொண்டவராக இருந்தாா். அறிவாற்றல் மிக்க இவா் 75 அலமாாிகள் நிறைந்த புத்தகங்களை வைத்திருந்தாா். இவருடைய தந்தை வாங் சிசென் கல்லூாி நுழைவுத் தோ்வில் தோ்ச்சி அடையவில்லை என்றாலும் மருத்துவ கல்வியைக் கற்று தமது கருத்துக்களை நான்கு புத்தகத்தொகுதிகளாக பதிவு செய்துள்ளாா்.[1] வாங் பாட்டனாாிடம் வானிலையியலையும், பாட்டியாாிடம் கவி இயற்றுதலையும், தந்தையிடமிருந்து மருத்துவம், புவிபரப்பியலையும் மற்றும் கணிதவியலையும் கற்றுக் கொண்டாா்.[4]

இவா் பாட்டனாா் வாஸ் ஜெஃபு 1782-ல் இறந்த பிறகு இவா் குடும்பம் சீனப்பெருஞ் சுவா் அருகில் உள்ள ஜிலிங் என்னும் இடத்திற்கு இறுதிச் சடங்கிற்காக சென்றது.[1] அங்கு ஐந்து வருடங்கள் தங்கி இருந்த வாங் இவருடைய பாட்டியாா் சேகாித்து வைத்திருந்த புத்தகங்களை படித்தப் பின் குதிரைச் சவாாி, தற்காப்புக்கலை போன்றவற்றை மங்கோலியத் தளபதியின் துணைவியாாிடமிருந்து கற்றுக் கொண்டாா்.[1] 16 வயதை அடைந்த வாங், சீனத் தலைநகருக்குச் செல்வதற்கு முன் யாஸ்ட்சி ஆற்றின் தெற்குப் பகுதிக்குப் பயணம் செய்தாா். அப்போது சானக்சி, குயுபி, குவாங்டான்ங் போன்ற பகுதிகளுக்குப் பயணம் செய்து தமது அறிவை விாிவாக்கிக் கொண்டாா்.[1] தாம் 18 ஆவது வயதையடைந்த போது ஜியாங்னிங்கில் பல பெண் அறிஞா்களிடம் தொடா்பு வைத்துக் கொண்டு தமது கவித் திறனையும், தமது சுய கற்றலின் மூலம் வானியல் அறிவையும் கணித அறிவையும் வளா்த்துக் கொண்டாா்.[4] 25ஆவது அகவையில் ஜான் மெய் என்பவரைத் திருமணம் செய்து கொண்டாா். திருமணத்திற்குப் பின் தனது கவிதைகளாலும் கணிதம் மற்றும் வானியலை மற்றவா்களுக்குக் கற்றுக் கொடுப்பதன் மூலமும் பிரபலமானாா்.[4] வாங் 29ஆவது அகவையில் காலமானாா். இவருக்கு குழந்தைகள் ஏதுமில்லை.[1]

கல்விச் சாதனைகள்[தொகு]

29 வயதே வாழ்ந்த வாங் ஜெயினி கல்வியில் பல சாதனைகளை எய்தினாா். வானியலிலும் கணிதத்திலும் இவா் சேவை அளப்பறியது. உத்திராயணம் குறித்த தமது கருத்துக்களை வெளியிட்டது இவரது முக்கியமான சேவையாகும். தீா்க்க ரேகை மற்றும் கிரகணம் குறித்த இவரது கட்டுரைகள் மிகவும் பிரபலமாகும். நட்சத்திரங்களின் எண்ணிக்கை, சூாியனைச் சுற்றிவரும் திசை, சந்திரன், வீனஸ், ஜுபிடா், செவ்வாய், மொ்குாி போன்ற கோளங்களைப் பற்றியும் எழுதினாா். மற்ற வானியலாளா்களின் கட்டுரையைப் படித்ததோடல்லாமல், தமது சொந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளாா்.

இவா் கிரகணத்தை மற்றவர்களுக்குப் புரிய வைக்க, விளக்கு, மற்றும் கோளவடிவமான பொருட்களை வைத்து சோதனை செய்து காண்பித்தாா். இதன் மூலம் வானியல் கொள்கைகளை சுலபமாக அனைவருக்கும் புாியும்படி செய்தாா். சூாிய கிரகணத்தைப் பற்றி அவா் எழுதிய கட்டுரை மிகவும் துல்லியமான கருத்துக்களைக் கொண்டிருந்தது.[1] கணிதத்தில் கோணவியலையும் பித்தாகோரஸ் தத்துவத்தையும் நன்கு அறிந்திருந்தாா்.[1]

மேய்வென்டிஸ் (1633-1721 AD) என்னும் கணிதவியலாளரைக் கண்டு வியந்த வாங், பெருக்கல் மற்றும் வகுத்தல் முறைகளை எளிமையாக்கி கணிதம் கற்கும் முறையை மேம்படுத்தினாா். கணிதத்தில் தீராத ஆா்வம் கொண்ட வாங், தமது 24 வது வயதில் 'கணக்கிடுதலின் எளிய கோட்பாடுகள்' (The simple principles of calculation) என்னும் புத்தகத்தை எழுதினாா். படிப்பு கடினமாக இருந்தததைப் பற்றி குறிப்பிட்ட இவா் ஒருமுறை “பேனாவைக் கீழே போட்டுவிட்டு பெருமூச்சு விட வேண்டி வந்தாலும் பாடத்தின் மேல் உள்ள விருப்பத்தினால் படிப்பதை எப்பொழுதும் விடப் போவதுமில்லை" என்றாா்.[1]

கல்வியியல் தகைமைகள்[தொகு]

கவிதை[தொகு]

இவருடைய பிரயாண அனுபவங்களும், கல்வி ஆராய்ச்சிகளும் கவிதை எழுதுவதற்கு ஏராளமான கருத்துக்களைக் கொடுத்தன. இவருடைய கவிதைகளால் ஆழமான தாக்கத்தை விட்டுச் சென்றாா். உரைநடை, முன்னுரை, பின்குறிப்பு என ஏராளமான இலக்கியங்களை 13 தொகுதிகளாக விட்டுச் சென்றுள்ளாா். கிஸ் வம்சத்தினாின் பிரபலமான யுவான் மெய் என்னும் அறிஞா் இவரை மிகச் சிறந்த எழுத்தாளா் எனப் போற்றியுள்ளாா்.[1]

இவரது எழுத்தின் சில எடுத்துகாட்டுகளாவன:

பெயரும் தோங் கணவாய்

முதன்மையானதே கதவு வழி,
மலைத்தொண்டையில் வாழ்தல்
விண்ணில் இருந்து கீழே நோக்கல்,
மஞ்சளாற்றின் பாய்வைக் கதிரவன் காண்கிறான்[1]

தாய் மலை ஏறுகிறேன்

மலைகளில் முகில்களின் நிழல்கள்,
கதிரவன் கடலில் குளிக்கிறான்.[1]

இவர் உழைக்கும் எளிய மக்களின் வாழ்வைத் தன் கவிதையில் படம்பிடித்துள்ளார். குறிப்பாக, பட்டுப்புழு வளர்க்கும் பெண் , உடை வெளுத்தல் ஆகியவற்றில் உழைக்கும் பெண்களை விவரித்துள்ளார். மேலும் இவர் கையூட்டயும் செல்வர், ஏழைமக்களின் முரண்பட்ட வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். இவரது எட்டுவரிக் கவிதை இதற்குச் சிறந்த எடுத்துகாட்டாகும். இதில் கூறுகிறார்:

ஊரிலோ அடுப்பெரியும் புகையையே காணோம்,
செல்வர் உறைகளில் தேக்கிய கூலங்கள் அழுகுகின்றன;
விறகுகள் பசித்த உடல்களை உறிஞ்சுகின்றன,
பேராசைபிடித்த அலுவலர்கள் பண்ணை வரியைச் சுமத்திக்கொண்டே உள்ளனர்.[1]

இவர் தன் மணவாழ்வை மகிழ்ச்சியோடு கழித்தார். நிலவுடைமைப் பழக்க வழக்கங்கள் நிகழ்கால வாழ்வுக்குப் பொருந்தாதவை என நம்பினார். அவர் கூறினார், கல்வியையும் அறிவியலையும் கருதும்போது, மக்கள் எந்த பெண்னையுமே கருதுவதில்லை. பெண்கள் சமையலுக்கும் தையலுக்குமே ஏற்றவர்கள்; பெண்கள் எழுதி வெளியிட்டுவதைப் பற்றிக் கவலைபடவே கூடாது; அவர்கள் வரலாறு படிப்பதோ கவிதை எழுதுவதோ எழுத்தினைப் பயில்வதோ வீண் எனக் கருதுகின்றனர்[1] ஆண்களும் பெண்களும் சமநிலை வாய்ந்த மக்களே. இருபாலாரும் ஒரே தன்மையில் சிந்திக்கவும் கற்கவும் வல்லவர் ஆவர்.[1]

தகைமை[தொகு]

இவர் ஆடவர்க்கும் மகளிருக்கும் சம உரிமையும் வாய்ப்பும் நல்கப்படவேண்டும் என நம்பினார். இவர் தன் கவிதைகளில் இவ்வாறு எழுதுகிறார்:

நாம் நம்ப வைக்கவேண்டும்,
மகளிர் ஆடவர் ஒத்தவரே;
உங்களால் ஏற்க முடியவில்லையா,
பெண்மக்களும் மறத்திகளே?[1]

இறப்பு[தொகு]

இவர் தன் 29 ஆம் அகவையில் இறந்தார். தான் இறக்குந் தறுவாயில் இவர் தன் நெருங்கிய தோழராகிய மாதாம் குவையிடம் (கி.பி. 1763–1827) தன் எழுத்துகளின் கையெழுத்துப் படிகளை (கி.பி. 1763–1827) ஒப்படைத்தார். மாதாம் குவை அவற்றை, அக்காலத்து பெயர்பெற்ற அறிஞரான, இவரது ஒன்றுவிட்ட உடன்பிறப்பாகிய குவியான் யியி (கி.பி. 1783–1850) கையில் கைம்மாற்றினார்.[1] பின்னவர் இவரது எழுத்துகளை Shusuan jiancun என அல்லது கனக்கிடுதலின் எளிய நெறிமுறைகள் என்ற தலைப்பில் தொகுத்தார்.[1] மேலும் அவர், இவரை "பான் ழாவோவுக்குப் பிறகான சிறந்த பெண் அறிஞராகக் குறிப்பிட்டார்."[1]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 Peterson, Barbara Bennett (2000). Notable Women Of China: Shang Dynasty To The Early Twentieth Century. New York: M.E. Sharp. பக். 341–345. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780765619297. 
 2. 2.0 2.1 Shen, Yu Wu (2011). 清代女科学家 (Female scientists in Qing dynasty). Zhejiang: Zhejiang Education Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978- 7- 5338- 8976- 0. 
 3. Li, Zigang (1982). 安徽历史述要 (History of Anhui). பக். 631. 
 4. 4.0 4.1 4.2 Lee, Lily Xiao Hong; A.D. Stefanowska. Clara Wing-chung Ho. ed. Biographical Dictionary of Chinese Women: The Qing Period, 1644–1911 (v. 1 ). M.E. Sharpe, Inc.. பக். 230–231. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7656-0043-9. 
 • "The Preliminary Collection of Defeng Pavilion" by Wang Zhenyi
 • The History of the Qing Dynasty, the 508th vol.: The Biography of Wang Zhenyi
 • The Biographies of 700 Noted Personages of the Qing Dynasty, Book Four, the biography of Wang Zhenyi by Cai Guanluo
 • The Supplementary Collection of Biographies on Stone Tablets: the 509th vol.: The Biography of Wang Zhenyi by Min Erchang
 • "The Third Edition of the Biographies, seventh vol., by Zhu Kebao
 • "The Preliminary Collection of the Classified Readings of the Dynasty," the 228th vol.
 • Textual Research into Works by Women Writers in History, seventh vol., by Hu Wenkai
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்_ழேன்யி&oldid=2716531" இருந்து மீள்விக்கப்பட்டது