வாங் டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாங் டேன்
Wang Dan
Wang Dan
பிறப்பு26 பெப்ரவரி 1969 (1969-02-26) (அகவை 54)
சீன மக்கள் குடியரசு, பெய்ஜிங்
இருப்பிடம்ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்பீக்கிங் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
வாங் டேன்
சீனம் 王丹
கையொப்பம்

வாங் டேன் (பெப்ரவரி 26, 1969 இல் பிறந்தார்) என்பவர் சீன சனநாயக இயக்கத்தின் ஒரு தலைவராவார். இவர் 1989 ஆம் ஆண்டு தியானன்மென் சதுக்க எதிர்ப்புக்களில் மிகக் குறிப்பிடத்தக்க மாணவர் தலைவர்களில் ஒருவராக இருந்தார். இவர் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 2009 ஆகத்து முதல் 2010 பெப்ரவரி வரை, தைவான் தேசிய செங்கி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் வருகைதரு பேராசிரியராக கற்பித்தார். [1] பின்னர் அவர் தேசிய சிக் ஹுவா பல்கலைக்கழகத்தில் 2015 வரை கற்பித்தார். [2] [3]

1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களை சீன அரசு படைகள் ஒடுக்கிய பிறகு வாங் டேன் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் 43 மாதங்கள் சிறையில் கழிந்த நிலையில் 1993 ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்த சீனா விரும்பியது. இச்சமயத்தில் வாங் டேனை அரசு விடுவித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் கைது செய்யப்பட்டு 11 ஆண்டுகள் சிறைதண்டணை விதிக்கப்பட்டார். 1998 இல் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் சீனாவுக்கு வந்ததையொட்டி 1998இல் விடுதலை செய்யப்பட்டவர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.[4] சீனாவில் சனநாயகம், சுதந்திரம் போன்றவற்றை ஊக்குவிப்பதில் தற்போது வாங் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் இது தொடர்பான தலைப்புகளில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார், இவர் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு, உலகளாவிய சீன சமூகங்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுவதற்காக உலகம் முழுவதும் பயணித்து வருகிறார்.

இவரது நண்பர்களான வாங் ஜுண்டே மற்றும் லியு கேங் சக செயற்பாட்டாளர்களாக உள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "Wang Dan to teach history". Taipei Times. 22 May 2009. 5 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Wang Dan attacked by knife-wielding woman". Taipei Times. 13 November 2010. 5 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Wang Dan's contract not renewed - Taipei Times". 2018-08-02 அன்று பார்க்கப்பட்டது.
  4. வாங் டேன், மொழிபெயர்பு சாரி (6 சூன் 2019). "தியான்மென் சதுக்கத்தில் கரைந்த ஜனநாயகக் கனவு!". கட்டுரை. இந்து தமிழ். 12 சூன் 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்_டேன்&oldid=3578225" இருந்து மீள்விக்கப்பட்டது