வாங் குவான்சாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாங் குவான்சாங்
பிறப்பு15 பெப்ரவரி 1976 (1976-02-15) (அகவை 44)
உலியன் கவுண்டி, ஷான்டோங், சீனா
தேசியம்சீனம்
பணிவழக்குறைஞர்

வாங் குவான்சாங் (Wang Quanzhang) (மரபுவழிச் சீனம்: 王全璋பின்யின்: Wáng Quánzhāng,15 பிப்ரவரி 1976-இல் சீனாவில் பிறந்த வழக்கறிஞரும், பன்னாட்டு மனித உரிமை செயற்பாட்டாளரும் ஆவார். இவர் 2009-இல் சீன நடவடிக்கைகள் எனும் மனித உரிமைகளுக்கான தொண்டு நிறுவனத்தை துவக்கியவர் ஆவார்.[1]

சீன அதிபரும், சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளருமான சீ சின்பிங்க்கு எதிராக சீனா முழுவதும் வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 9 சூலை 2015 முதல் துவங்கிய போராட்டத்தில் கலந்து கொண்ட வாங் குவான்சாங் மற்றும் பிறரும் 709 கடும் நடவடிக்கை அல்லது 709 வழக்கில் வாங் குவான்சாங் ஆகஸ்டு 2015-இல் கைது செய்யப்பட்டார்.[2] [2] எவ்வித விசாராணை இன்றி கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாங் குவான்சாங் 4 ஏப்ரல் 2019 அன்று விடுதலை செய்யப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Wang Quanzhang: China human rights lawyer trial begins". BBC News (26 December 2018). பார்த்த நாள் 26 December 2018.
  2. 2.0 2.1 Sudworth, John (22 May 2017). "Wang Quanzhang: The lawyer who simply vanished". BBC News. பார்த்த நாள் 26 December 2018.
  3. China human rights lawyer released after five years in jail

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாங்_குவான்சாங்&oldid=2946212" இருந்து மீள்விக்கப்பட்டது