வாங்னியா பொங்டே
வாங்னியா பொங்டே (Wangnia Pongte, இறப்பு: 15 சூன் 2013) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் கால்பந்து வீரரும் ஆவார்.
1990ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் சாங்லாங் வடக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] ஆராய்ச்சி, நூலகம், தொழிலாளர் மற்றும் வேளாண்மைக்கான இணையமைச்சராக (சுயாதீனப் பொறுப்பு) பணியாற்றினார். 2004ஆம் ஆண்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] அருணாச்சலப் பிரதேச கனிம மேம்பாட்டு வர்த்தகக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.
வாங்னியா பொங்டே 2013 ஆம் ஆண்டு சூன் மாதம் 15ஆம் தேதியன்று இறந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள், மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர்.[2] அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் துட்சா இணக்குழுவைச் சேர்ந்த போங்டே என்ற சிறப்புக்கு உரியவராக உள்ளார்.[3][4] பெரும்பாலும் துட்சா சமூகத்தின் தந்தையாக இவர் கருதப்படுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Election results". Election Commission of India.
- ↑ Former Arunachal minister Wangnia Pongte dies in road accident
- ↑ "Statue of former minister unveil". Arunachal observer. Retrieved 8 June 2022.
- ↑ "Community hall dedicated in memory of Wangnia Pongte". Arunachal times. Retrieved 8 June 2022.