உள்ளடக்கத்துக்குச் செல்

வாக்கிரி பூலி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாக்ரி பூலி
ஹக்கிபிக்கி/நரிக்குறவர் மொழி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மகாராட்டிரா
இனம்12,000 (2007)[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
9,300  (2007)[1]
உள்ளூர் எழுத்துமுறை
மொழிக் குறியீடுகள்
ISO 639-3vaa
மொழிக் குறிப்புvaag1238[2]

வாக்கிரி பூலி (Vaagri Booli language) என்பது குசராதை பூர்வீகமாக கொண்ட வாக்ரி இன மக்களால் பேசப்படும் மொழி ஆகும்.[3] இது அழிவு நிலையில் இருக்கும் ஒரு மொழி ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராட்டிரா மாநிலங்களில் வாழும், நாடோடி மக்களான நரிக்குறவர் என்று பொதுவழக்கில் அழைக்கப்பும் ஹக்கி பிக்கி எனும் மக்களின் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள மொழியாகும்.[4][5] இம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. இது ஒரு இந்தோ ஆரிய மொழி ஆகும். இம்மொழியானது பில் மொழியை ஒத்துள்ளது. தமிழ்நாட்டில் வாழும் நரிக்குறவர் எனப்படும் ஹக்கி பிக்கி[6] இன மக்கள் வாக்கிரி பூலி மொழியை தங்களுக்குள் மட்டும் பேசுகின்றனர்.

இந்தோ ஆரிய மொழியான வாக்கிரி பூலி மொழி பேசும் நரிக்குறவர்கள் போன்றே பெயர் கொண்ட தொல்தமிழ்க் குடிகளான குறவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

வாக்கிரி பூலி - தமிழ் - ஆங்கில அகராதி

[தொகு]

இந்த மொழிக்கான அகராதியை மொழியியல் பேராசிரியர் சீனிவாசன் வர்மான வாக்கிரி பூலி மொழிக்கான வாக்ரி-தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றை 2010 இல் வெளியிட்டார்.[7]

இலக்கிய மொழிபெயர்ப்பு

[தொகு]

கிட்டு சிரோமனி என்பவரால் திருக்குறள் வாக்கிரி பூலி மொழியில் முதன்முறையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[8]

சீனிவாச சருமா (Srinivasa Sarma) என்பவர், வாக்கிரி பூலி மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார். இது 2022 ஆம் ஆண்டு செம்மொழி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 வாக்ரி பூலி at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Vaagri Booli". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. Correspondent, Vikatan. "வாக்ரிபோலி குருவிக்காரர்களின் மொழி". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  4. Spoken L1 Language: Vaagri Booli
  5. Language: Vaagri Booli
  6. Hakki Pikki in India
  7. நரிக்குறவர்கள் பேசும் "வாக்ரி' மொழிக்கு அகராதி
  8. "Thirukkural now in Arabic". The Hindu (Chennai). 25 March 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/thirukkural-now-in-arabic/article4545807.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்கிரி_பூலி_மொழி&oldid=3656211" இலிருந்து மீள்விக்கப்பட்டது