வாகைப்பறந்தலைப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாகைப்பறந்தலைப் போர் என்பது சங்ககாலத்தில் நடந்த போராகும். இப்போர் முதலாம் அதிகமானான வேங்கைக் குன்றின் தலைவன் வினைவல் அதிகன் பங்கேற்ற போராகும்.

முன்னதாக ஆய் எயினனுக்கும், நன்னனது படைத்தலைவன் ஞிமிலிக்கும் நன்னனது தலைநகரான பாழியில் போர் நடந்தது. போரில் ஆய் எயினன் மாண்டான். இந்நிலையில் ஞிமிலி ஆய் எயினனின் நகர், வாகையைக் கைப்பற்ற முனைந்தான். வாகையைப் பாதுகாக்க பசும்பூண் பாண்டியன் தன் நண்பனும் படைத்தலைவனுமான அதிகனை அனுப்பினான். அதிகனுக்கும் ஞிமிலிக்கும் வாகைப்பறந்தலையில் போர் நடந்தது. இப்போரில் கொங்கர்கள் நன்னனின் படைகளுக்கு உதவினர். யானை மீதிருந்து போரிட்ட அதிகன் யானையுடன் கொல்லப்பட்டான். அதிகன் கொல்லப்பட்டதைக் கொங்கர் கொண்டாடி மகிழ்ந்தனர். [1]

குறிப்புகள்[தொகு]

  1. கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன் களிரொடு பட்ட ஞான்றை ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பு - பரணர் பாடல் குறுந்தொகை 393