வவுனியா வடக்கு பிரதேச சபை
வவுனியா வடக்கு தமிழ்ப் பிரதேச சபை | |
|---|---|
| வகை | |
| வகை | |
| தலைமை | |
தலைவர் | கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு, இலங்கைத் தமிழரசுக் கட்சி 27 சூன் 2025 முதல் |
துணைத் தலைவர் | சஞ்சுதன் விநாயகமூர்த்தி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு 27 சூன் 2025 முதல் |
| கட்டமைப்பு | |
| உறுப்பினர்கள் | 23 |
அரசியல் குழுக்கள் | அரசு (5)
எதிர் (18) |
| தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 2025 |
| வலைத்தளம் | |
| vavuniyanorth.ps.gov.lk/ | |
வவுனியா வடக்கு பிரதேச சபை (Vavuniya North Divisional Council) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் வவுனியா மாவட்டம், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கான உள்ளூராட்சி சபை ஆகும். சாலைகள், சுகாதாரம், வடிகால்கள், வீட்டுவசதி, நூலகங்கள், பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொது சேவைகளை வழங்குவதற்கு இந்தச் சபை பொறுப்பாகும். இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 14 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 23 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2][3]
வரலாறு
[தொகு]இலங்கையின் உள்ளூராட்சிகளின் வரலாற்றில் 1987 இல் ஒரு பெரும் மறுசீரமைப்பு இடம்பெற்றது. 1981 இல் அமைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகள் இல்லாமலாக்கப்பட்டு அவற்றுக்குப் பதிலாகப் பிரதேச சபைகள் அமைக்கப்பட்டன. 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம் 1987 ஏப்ரல் 15 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 1988 சனவரி 1 முதல் 257 பிரதேச சபைகள் செயற்பட ஆரம்பித்தன. வவுனியா வடக்கு பிரதேச சபை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கான உள்ளூராட்சி சபையாக நிறுவப்பட்டது. 1983 இல் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக இலங்கை அரசாங்கம் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி நாட்டின் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சிகளையும் இடைநிறுத்தியது.[4]
வட்டாரங்கள்
[தொகு]1987 ஆம் ஆண்டின் 15-ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் கீழ் வவுனியா வடக்கு பிரதேச சபை உருவாக்கப்பட்டது. இப்பிரதேச சபையின் கீழ் 25 கிராமசேவகர் பிரிவுகளும், 126 கிராமங்களைக் கொண்ட 14 வட்டாரங்களும் உள்ளன. இப்பிரதேச சபையின் எல்லைகளாக மாவட்டத்தின் வடக்கே பனைநின்றானை கிராமமும், கிழக்கே சம்பத்நுவர வட்டாரமும் தெற்கே வெடிவைத்தகல் கிராமமும், மேற்கே இராமனூர் புளியங்குளமும் உள்ளன.[5] 26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 14 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச சபையின் கீழ் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3][6]
- கனகராயன்குளம் வடக்கு - மன்னன்குளம்
- கனகராயன்குளம் தெற்கு
- சின்ன அடம்பன் - நயினாமடு
- குளவிசுட்டான் - மாறாஇலுப்பை
- நெடுங்கேணி
- ஒலுமடு - மாமடு
- புளியங்குளம் வடக்கு - புளியங்குளம் தெற்கு
- பரந்தன் - அனந்தர்புளியங்குளம்
- ஊஞ்சல்கட்டி - மருதோடை
- பட்டிக்குடியிருப்பு - கற்குளம்
- கஜபாபுரம் - மொனரவேவா
- கல்யாணபுர கிராமம்
- எத்தாவெட்டுனுவேவ
- சம்பத்நுவர
தேர்தல் முடிவுகள்
[தொகு]2011 உள்ளூராட்சித் தேர்தல்
[தொகு]2011 மார்ச் 17 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[7]
| கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
|---|---|---|---|---|
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[குறிப்பு 1] | 2,253 | 51.67% | 8 | |
| ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி[குறிப்பு 2] | 1,463 | 33.56% | 4 | |
| ஐக்கிய தேசியக் கட்சி | 608 | 13.94% | 1 | |
| மக்கள் விடுதலை முன்னணி | 36 | 0.83% | 0 | |
| செல்லுபடியான வாக்குகள் | 4,360 | 100.00% | 13 | |
| செல்லாத வாக்குகள் | 429 | |||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 4,789 | |||
| பதிவு செய்ய்யப்பட்ட வாக்காளர்கள் | 10,955 | |||
| வாக்குவீதம் | 43.72% | |||
முருகுப்பிள்ளை பாலசுப்பிரமணியம் (ததேகூ) தவிசாளராகவும், சுபரத்தினம் தணிகாசலம் (ததேகூ) உப-தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[8]
2018 உள்ளூராட்சித் தேர்தல்
[தொகு]2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 14 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 12 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 26 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[9]
| கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் | % | வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் |
பெற்ற வாக்குகளுக்குரிய உறுப்பினர்கள் |
உரித்தான முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை | |
|---|---|---|---|---|---|---|
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[குறிப்பு 3] | 2,794 | 27.98% | 8 | 0 | 8 | |
| இலங்கை பொதுசன முன்னணி | 1,870 | 18.73% | 5 | 0 | 5 | |
| ஐக்கிய தேசியக் கட்சி | 1,370 | 13.72% | 0 | 3 | 3 | |
| அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 1,254 | 12.56% | 1 | 2 | 3 | |
| தமிழர் விடுதலைக் கூட்டணி[குறிப்பு 4] | 1,124 | 11.26% | 0 | 3 | 3 | |
| சிறீ லங்கா சுதந்திரக் கட்சி | 973 | 9.74% | 0 | 2 | 2 | |
| மக்கள் விடுதலை முன்னணி | 303 | 3.03% | 0 | 1 | 1 | |
| ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி | 246 | 2.46% | 0 | 1 | 1 | |
| இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி | 51 | 0.51% | 0 | 0 | 0 | |
| செல்லுபடியான வாக்குகள் | 9,985 | 100.00% | 14 | 12 | 26 | |
| செல்லாத வாக்குகள் | 166 | |||||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 10,151 | |||||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 12,166 | |||||
| வாக்குவீதம் | 83.44% | |||||
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவராக சபாரத்தினம் தணிகாசலம் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக நாகலிங்கம் யோகராசா (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[6]
2025 உள்ளூராட்சித் தேர்தல்
[தொகு]2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[10] 14 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 9 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 23 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3]
| கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் | % | வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் |
பெற்ற வாக்குகளுக்குரிய உறுப்பினர்கள் |
உரித்தான முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை | |
|---|---|---|---|---|---|---|
| தேசிய மக்கள் சக்தி | 2,650 | 25.36% | 6 | 0 | 6 | |
| இலங்கைத் தமிழரசுக் கட்சி | 2,210 | 21.15% | 4 | 1 | 5 | |
| அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 1,696 | 16.23% | 2 | 2 | 4 | |
| சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி | 1,255 | 12.01% | 2 | 1 | 3 | |
| ஐக்கிய மக்கள் சக்தி | 956 | 9.15% | 0 | 2 | 2 | |
| இலங்கைத் தொழிற் கட்சி | 967 | 9.25% | 0 | 2 | 2 | |
| சர்வசன அதிகாரம் | 317 | 3.03% | 0 | 1 | 1 | |
| சுயேச்சைக் குழு | 201 | 1.92% | 0 | 0 | 0 | |
| சனநாயக தேசியக் கூட்டணி | 198 | 1.89% | 0 | 0 | 0 | |
| செல்லுபடியான வாக்குகள் | 10,450 | 100.00% | 14 | 9 | 23 | |
| செல்லாத வாக்குகள் | 157 | |||||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 10,607 | |||||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 15,088 | |||||
| வாக்குவீதம் | 70.30% | |||||
2025 தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவராக கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக சஞ்சுதன் விநாயகமூர்த்தி (சின்ன அடம்பன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[11]
இவற்றையும் பார்க்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017.
- ↑ "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017.
- ↑ 3.0 3.1 3.2 "வவுனியா மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டோர் விபரம் - 2025" (PDF). அரச வர்த்தமானி. Archived (PDF) from the original on 1 June 2025. Retrieved 6 June 2025.
- ↑ "TNA urges PM to put off NE local polls". தமிழ்நெட். 11 September 2002. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=7457.
- ↑ எமது சபை பற்றி, வவுனியா வடக்கு பிரதேச சபை
- ↑ 6.0 6.1 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
- ↑ "Local Authorities Election - 17.03.2011 Vavuniya District Vavuniya North Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.
- ↑ "PART IV (B) — LOCAL GOVERNMENT Notices under the Local Authorities Elections Ordinance (Chapter 262) LOCAL AUTHORITY ELECTIONS ORDINANCE". The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka 1699/5. 28 March 2011. http://www.documents.gov.lk/Extgzt/2011/PDF/Mar/1699-5/1699_5E.pdf. பார்த்த நாள்: 24 August 2011.
- ↑ "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். p. 1087. Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
- ↑ "Local Authorities Election - 6.05.2025 Vavuniya District Vavuniya North Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka.
{{cite web}}: CS1 maint: url-status (link) - ↑ "வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி". தமிழ்வின். Archived from the original on 12 சூலை 2025. Retrieved 12 சூலை 2025.