வவுனியாப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வவுனியாப் பல்கலைக்கழகம்
University of Vavuniya
වවුනියා විශ්ව විද්‍යාලය
UoV logo.png
முந்தைய பெயர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம்
குறிக்கோளுரைநன்றின்பால் உய்ப்பது அறிவு
வகைபொது
உருவாக்கம்1 ஆகத்து 2021
Academic affiliation
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
துணை வேந்தர்தம்பு மங்களேசுவரன்
அமைவிடம்வவுனியா, இலங்கை
மொழிதமிழ், சிங்களம், ஆங்கிலம்
இணையதளம்mdl.vau.ac.lk

வவுனியாப் பல்கலைக்கழகம் (University of Vavuniya; சுருக்கமாக UoV) என்பது இலங்கையின் வடக்கே வவுனியாவில் இயங்கும் ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிய வவுனியா வளாகத்தைப் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தும் அறிவிப்பை இலங்கை அரசு 2021 சூன் மாதத்தில் அறிவித்தது.[1] அதிகாரபூர்வமாக இப்பல்கலைக்கழகம் 2021 ஆகத்து 1 இல் ஆரம்பமானது. இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தராக பேராசிரியர் தம்பு மங்களேசுவரன் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.[2]

வரலாறு[தொகு]

1991 இல், கணித அறிவியல்கள், கணக்கியல், நிதித்துறை ஆகிய கற்கை நெறிகளுக்காக வவுனியா நகரில் வட மாகாண இணைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. 1997 மார்ச் 26 இல் இக்கல்லூரியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக செயற்படுவதற்கான வர்த்தமானி அறிவித்த வெளியிடப்பட்டது.[3] 1997 ஏப்ரல் 1 முதல் இது வவுனியா வளாகமாக இயங்கத் தொடங்கியது. இங்கு முதலில் வணிகக் கல்விகள், செயல்முறை அறிவியல் ஆகிய பீடங்கள் அமைக்கப்பட்டன. 1998 அக்டோபரில் இவ்விரு பீடங்களுக்கும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.[4]

இப்பல்கலைக்கழகம் வவுனியாவில் இருந்து 9 கிமீ தூரத்தில் வவுனியா-மன்னார் வீதியில் பாம்பைமடு, சொப்பளப்புளியங்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. 160 ஏக்கர் காணி இவ்வளாகத்திற்காக பெறப்பட்டது.[4]

அமைப்பு[தொகு]

  • வணிகக் கற்கைகள் பீடம்
    • நிதித்துறை மற்றும் கணக்கியல் துறை
    • ஆங்கில மொழிக் கல்வித் துறை
    • திட்ட முகாமைத்துவத் துறை
    • மனிதவள மேலாண்மைத் துறை
    • சந்தை மேலாண்மைத் துறை
    • வணிகவியல் பொருளாதாரத் துறை
    • மேலாண்மை மற்றும் தொழில்முனைவுத் துறை
  • செயல்முறை அறிவியல் பீடம்
    • இயற்பியல் அறிவியல் துறை
    • உயிரியல் அறிவியல் துறை
  • தொழிநுட்பக் கற்கைகள் பீடம்
    • தகவல் மற்றும் தகவல்தொடர்புத் தொழிநுட்பத் துறை

மேற்கோள்கள்[தொகு]

  1. "New state university to be established from August". Adaderana. http://www.adaderana.lk/news/74522/new-state-university-to-be-established-from-august. 
  2. "First Vice Chancellor of the 13th University of Sri Lanka named". Colombo Page. http://www.colombopage.com/archive_21A/Jul14_1626245411CH.php. 
  3. "History". Jaffna, Sri Lanka: University of Jaffna. 22 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "History". 2021-08-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 ஆகத்து 2021 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]