வள விபரிப்பும் அணுக்கமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வள விபரிப்பும் அணுக்கமும் (Resource Description and Access - RDA - ஆர்.டி.எ) என்பது ஒரு விபரப்பட்டியல் சீர்தரம் ஆகும். இது ஒரு வளத்தை விபரிக்க, கண்டுபிடிக்க உதவும் மீதரவுகளை உருவாக்குவதற்கான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் கொண்டுள்ளது. இந்தச் சீர்தரம் நூலகம், ஆவணகம், அருங்காட்சியகம் போன்ற அமைப்புகள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.

இது மேற்குநாடுகளில் பரந்து பயன்படுத்தப்பட்ட ஆங்கிலோ-அமெரிக்க விபரப்பட்டியல் விதிகள் சீர்தரத்தின் வாரிசு ஆகும். இது அனைத்துலக பயன்பாட்டை நோக்காக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 2012 இற்கு பின்னர் பரந்த பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 2013 இல் காங்கிரசு நூலகம், பிரித்தானியா நூலகம், கனடிய நூலகம் மற்றும் ஆவணங்கள், அசுத்திரேலியா தேசிய நூலகம், யேர்மனிய தேசிய நூலகம் ஆகியவை இதனை 2013 இல் முழுமையாக இதனை நிறைவேற்றவுள்ளன.

ஆர்.டி.எ யின் பயன்கள்[தொகு]

  • எண்ணிமச் சூழலுக்கு உகந்தது.
  • பிற மூலங்களில் இருந்து தரவுகளைப் பெறுவதற்கு இலகுவானது.
  • கணினி மூலம் தரவுகளைப் பரிமாற உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • Functional Requirements for Bibliographic Records அடிப்படையாகக் கொண்டது.

வெளி இணைப்புகள்[தொகு]