உள்ளடக்கத்துக்குச் செல்

வள்ளியம்மை சுப்பிரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வள்ளியம்மை சுப்பிரமணியம்
பிறப்புஆசைப்பிள்ளை வள்ளியம்மை
(1938-10-07)7 அக்டோபர் 1938
சுழிபுரம், யாழ்ப்பாணம்
இறப்புசூன் 26, 2025(2025-06-26) (அகவை 86)
சுழிபுரம், யாழ்ப்பாணம்
இருப்பிடம்சத்தியமனை, சுழிபுரம்
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஆசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்ஆசைப்பிள்ளை,
செல்லமுத்து
வாழ்க்கைத்
துணை
கே. ஏ. சுப்பிரமணியம்
பிள்ளைகள்சத்தியராஜன் (மீரான் மாஸ்டர், 1962-2001),
சத்தியமலர்,
சத்தியகீர்த்தி
வலைத்தளம்
சத்தியமனை

வள்ளியம்மை சுப்பிரமணியம் (7 அக்டோபர் 1938 – 26 சூன் 2025) ஈழத்து எழுத்தாளரும், சமூக உணர்வாளரும், நெசவு ஆசிரியரும் ஆவார். இவர் இலங்கையின் பொது உடமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே. ஏ. சுப்பிரமணியத்தின் மனைவி ஆவார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]
திருமணத்தில் கே. ஏ. சுப்பிரமணியம் வள்ளியம்மைக்கு கட்டிய அரிவாளும் சம்மட்டியும் மாங்கல்யத் தாலி

வள்ளியம்மை சுப்பிரமணியம் யாழ்ப்பாண மாவட்டம், சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாக‍க் கொண்டவர். பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கற்கும் காலத்திலேயே எழுத்தார்வம் மிக்கவராய் திகழ்ந்த இவர் பண்டிதர் படிப்பினை மேற்கொண்டு பால பண்டிதர் தேர்வில் சித்திபெற்றார். நெசவுக் கற்கை நெறியில் பயின்று நெசவு ஆசிரியராக பல்வேறு ஊர்களில் பணிபுரிந்தார். 1962 இல் கொல்லங்கலட்டியைச் சேர்ந்த பொதுவுடமைவாதியான கே. ஏ. சுப்பிரமணியம் என்பவரைக் காதலித்து கலப்புத் திருமணம் புரிந்த இவரது திருமணம் சீர்திருத்த திருமணமாக அமைந்த‍து. அரிவாளும் சம்மட்டியுமே தாலியாக அமைந்த‍து. சத்தியராசன் (மீரான் மாஸ்டர்), சத்தியமலர், சத்தியகீர்த்தி என மூன்று பிள்ளைகளைப் பெற்றார். ஒரு சமூகப் போராளியாக சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் தலைமை தாங்கிய துணைவருக்கு உற்ற துணையாக இருந்து பல இன்னல்களையும் சுமைகளையும் சுமந்து வாழ்ந்து வந்தவர்.[3][4] இனப்போர்க் காலத்தில் மூத்த மகன் மீரான் மாஸ்டர் இனவிடுதலைப் பாதையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அமைப்புடன் இணைந்தார். இதனால் 1984 டிசம்பரில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். இந்திய-இலங்கை ஒப்பந்தம், 1987க்குப் பிறகும் அவர் விடுவிக்கப்படவில்லை. வள்ளியம்மையின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் கோரிக்கைகள் மூலம் பன்னாட்டு மன்னிப்பு அவை தலையிட்டு அவரை விடுவித்தது.[5][6] பின் தமிழகத்தில் நடந்த வாகன விபத்தில் மீரான் மாஸ்டர் இறந்துபோனார். வள்ளியம்மை சிங்கப்பூரில் வசித்தபோது தனது எழுத்து பணியை மீண்டும் ஆரம்பித்தார்.[7] 82 வயதில் மீள வந்து, தனது மகளுடன் இலங்கை சுழிபுரம் சத்தியமனையில் வசித்தபோது, கே.ஏ.எஸ் சத்தியமனை நூலகத்தை அமைத்தார்.[3][8]

எழுத்துலகில்

[தொகு]

பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே எழுத்தாற்றலை விருத்திசெய்த இவர் பண்டிதர் தேர்வுக்காய் கற்றகாலத்தில் எழுதிய சிறுகதைகள் வீரகேசரி, கலைமதி, கலைச்செல்வி, ஜனசக்தி ஆகிய இதழ்களில் வெளிவந்தன. சிங்கப்பூரில் கடற்கரைச் சாலை கவிமாலை அமைப்புடன் இணைந்து பல கவிதைகளை யாத்து வாசித்துள்ளார்.[9] விவாத அரங்குகளில் உரையாற்றியுள்ளார். இவரது பள்ளிக்கூட அனுபவங்களைத் தொகுத்து "பசுமையான நினைவுகளின் பண்ணாகம் மெய்கண்டான்" எனும் நூலை 2019 இல் எழுதியுள்ளார். இவரது கவிதைகளையும் சிறுகதைகளையும் தொகுத்து நவம்பர் 2019 இல் தேசிய கலை இலக்கியப் பேரவை, "வெற்றிக்கு வலிகள் தேவை" என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளது. "ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள்" நூலிலும் இவரது கவிதை பிரசுரமானது. தொடர்ந்தும் தனது துணைவருடனான வாழ்க்கைப் பயணத்தை "வாழ்வின் சந்திப்புகள்" என்ற தலைப்பில் தொடராக முகநூலில் எழுதியுள்ளார்.[10][11][12]

சமூகப் பணிகள்

[தொகு]

நெசவு ஆசிரியையாக பணியாற்றியபோது செல்லும் கிராமங்களிலெல்லாம் தனது மாணவிகளை வழிப்படுத்துவதில் ஆற்றல் மிக்கவராக திகழ்ந்துள்ளார். கணவரின் தலைமறைவு வாழ்வில் பல இன்னல்களையும் தாங்கியவர். இளமையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளிலும் தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் இருந்து செயற்பட்டுள்ளார்.[1][2][3]

வெளியான நூல்கள்

[தொகு]
  • பசுமையான நினைவுகளில்...பண்ணாகம் மெய்கண்டான்
  • வெற்றிக்கு வலிகள் தேவை
  • கற்க கசடற
  • பாட்டி சொன்ன கதைகள்
  • ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தோழர் மணியம் நினைவு மலர் 1989".
  2. 2.0 2.1 சுப்பிரமணியம், கே. ஏ. (நினைவுமலர்).
  3. 3.0 3.1 3.2 சி. கா. செந்திவேல். தோழர் மணியம் நினைவுகள், தோழர் மணியத்தின் திருமணம், பக். 46-51, சத்தியமனை 138-139, வள்ளியம்மை 159.
  4. "NDMLP 40th Anniversary Seminar and Meeting, Message of Greeting from Valliammai 2018".
  5. "Exchange of letters between Valliammai and Amnesty International வள்ளியம்மை மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இடையே கடிதங்களின் பரிமாற்றம்". Saturday Review (Sri Lankan newspaper) Page 8. 12 September 1987. http://noolaham.net/project/244/24396/24396.pdf. 
  6. சூத்திரம்யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து மீரான் மாஸ்ரர் சத்தியராஜன் எழுதிய திருமண வாழ்த்து (1986)
  7. "சிங்கப்பூர் தமிழ் முரசு". தமிழ் முரசு. 03 August 2008. https://www.tamilmurasu.com.sg/. 
  8. கே. ஏ. சுப்பிரமணியம் சத்தியமனை நூலகம் කේ.ඒ. සුබ්‍රමනියම් සත්‍යමනායි පුස්තකාලය
  9. "சிங்கப்பூர் கடற்கரைச் சாலை கவிமாலை-வி.புருஷோத்தமன்". தினமலர். 5 September 2011. https://www.dinamalar.com/index.asp. 
  10. கழனிக்கவி Page 54 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா மலர் 2009.
  11. "தமிழ் வாழ்த்து: ஈழத்துத்தாய் வள்ளியம்மை சுப்பிரமணியம்".
  12. Tampines Changkat Community Club. Archived from the original on 2023-03-22. Retrieved 2020-09-28. I remember...... Connecting the young and old, 2011, A book published by Tampines Changkat Community Club in 2011, சிங்கப்பூர் நேர்காணல் "I remember my passion for literature" - Interviewer Yvonne Koh, Befriended Chandra Shiva with Valliammai Subramaniam in 2011

வெளி இணைப்புகள்

[தொகு]