உள்ளடக்கத்துக்குச் செல்

வளைய சேர்மங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்றிணைந்து வளைய சேர்மங்களை உருவாக்குகின்றது

மூடிய சங்கிலித் தொடர் அல்லது வளைய சேர்மங்கள்

[தொகு]

மூடிய சங்கிலித் தொடர் அமைப்புள்ள கரிம சேர்மங்களை வளைய சேர்மங்கள் ஏன்கிறோம்.

இவற்றை மேலும்

(1) ஓரின வளைய அல்லது கார்பன் வளைய சேர்மம்

(2) பல் இன வளைய சேர்மங்கள் ஏனவும் வகைப்படுத்துகிறோம்.

ஓரின வளையச் சேர்மம்

[தொகு]

வளைய அமைப்பில் கார்பன் அணுக்கள் மட்டுமே உள்ளன. இதை மேலும் (அ) அரோமேட்டிக் சேர்மம் (ஆ) அலிபாட்டிக் வளைய சேர்மம் எனவும் வகைப்படுத்துகிறோம்.

அ)அரோமேட்டிக் சேர்மங்கள் (பென்சீன் வழி)

ஒன்று அல்லது அதிகமாக பென்சீன் வளையங்களை தங்கள் அமைப்பிலே கொண்டிருக்கும் சேர்மங்களை ஆரோமேட்டிக் பென்சீன் வழி சேர்மங்கள் ஏன்கிறோம். அநேகமாக அவை நறுமணமுடையவை. (கிரேக்க மொழியில் "ஆரோமா' என்றால் நறுமணம் என்று பொருள்) 

பென்சீன்

 ஆ)அலிபாட்டிக் வளைய சேர்மம்

சைக்ளோ ஹெக்சேன்

கார்பன் அணுக்களை மட்டும் வளைய அமைப்பில் கொண்டிருக்கும் சேர்மங்களை ‘அலிசைக்ளிக்' அல்லது ‘அலிபாட்டிக் வளைய சேர்மம்' அல்லது கரிம வளைய சேர்மங்கள் என்கிறோம். இவை வளைய அமைப்பைப் பெற்றிருந்தாலும், அலிபாட்டிக் வளைய சேர்மங்களையே ஒத்திருக்கின்றன. 

பல் இன வளைய சேர்மங்கள்

[தொகு]
பல் இனவளைய சேர்மம்
பிரிடின்

வளைய சேர்மங்களில், கார்பன் அணுக்களோடு, வேறுவகை அணுக்களாகிய நைட்ரஜன், ஆக்சிஜன், கந்தகம் - அமைக்கப்பட்டிருந்தால் அவை பல் இன வளைய சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைய_சேர்மங்கள்&oldid=3956590" இலிருந்து மீள்விக்கப்பட்டது