வளைய ஓசோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வளைய ஓசோன்
Ball and stick model of cyclic ozone
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
மூவாக்சிரேன் [1]
இனங்காட்டிகள்
153851-84-4 N
ChemSpider 13375217 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16206854
பண்புகள்
O3
வாய்ப்பாட்டு எடை 48.00 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

வளைய ஓசோன் (Cyclic ozone) என்பது கோட்பாட்டளவில் கணிக்கப்பட்ட ஓசோன் வடிவமாகும். சாதாரண ஒசோனைப் போலவே இதிலும் மூன்று ஆக்சிசன் அணுக்கள் உள்ளன. இம்மூன்று ஆக்சிசன் அணுக்களும் எவ்வாறு அடுக்கப்பட்டு இணைந்துள்ளன என்பதில் இவ்விரண்டு வகை ஓசோன்களும் வேறுபடுகின்றன. சாதாரண ஓசோனில் ஆக்சிசன் அனுக்கள் வளைந்த வரிசையில் இணைந்துள்ளன. வளைய ஓசோனில் உள்ள ஆக்சிசன் அணுக்கள் சமபக்க முக்கோண வடிவில் இணைந்துள்ளன.

வளைய ஓசோனின் சில பண்புகள் கோட்பாட்டளவில் கணிக்கப்பட்டுள்ளன. இவை சாதாரண ஓசோனை விட அதிக ஆற்றல் பெற்றவையாக இருக்கும்[2].

வளைய ஓசோன் மிகச்சிறிய அளவில் காற்றிலுள்ள மக்னீசியம் ஆக்சைடு படிகங்களின் மேற்பரப்பில் வளைய ஓசோன் மிகச்சிறிய அளவில் காணப்படுகிறது என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன[3]. வளைய ஓசோனை பெருமளவில் தயாரிக்க முடிவதில்லை. ஆனாலும் ஒரு ஆய்வாளர் சீரொளியை உபயோகித்து அதை பெருமளவில் தயாரிக்க முயற்சிகள் மேற்கொண்டார்[4].

ஒருவேளை இதை பெருமளவில் தயாரிக்க முடிந்தால் அவ்வளைய ஒசோன் அதிக நிலைப்புத் தன்மையுடன் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திரவ ஆக்சிசனுடன் வளைய ஓசோனைச் சேர்த்து ராக்கெட்டு எரிபொருளின் கணத்தாக்கு எண்ணை மேம்படுத்த முடியுமென்றும் நம்பப்படுகிறது[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "CID 16206854 - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information (11 July 2007). பார்த்த நாள் 21 October 2011.
  2. Roald Hoffman (January–February 2004). "The story of O. The Ring". American Scientist 92 (1): 23–24. doi:10.1511/2004.1.23. http://www.americanscientist.org/issues/pub/the-story-of-o/5. பார்த்த நாள்: 2010-06-05. 
  3. Plass, Richard; Kenneth Egan; Chris Collazo-Davila; Daniel Grozea; Eric Landree; Laurence D. Marks; Marija Gajdardziska-Josifovska (November 30, 1998). "Cyclic Ozone Identified in Magnesium Oxide (111) Surface Reconstructions". Physical Review Letters 81 (22): 4891–4894. doi:10.1103/PhysRevLett.81.4891. Bibcode: 1998PhRvL..81.4891P. http://www.numis.northwestern.edu/Research/Articles/1998/98_PRL_Plass.pdf. பார்த்த நாள்: 2010-06-05. 
  4. 4.0 4.1 "Temple Researcher Attempting To Create Cyclic Ozone". Science Daily. February 8, 2005. http://www.sciencedaily.com/releases/2005/02/050205122519.htm. பார்த்த நாள்: 2010-06-05. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைய_ஓசோன்&oldid=2580320" இருந்து மீள்விக்கப்பட்டது