உள்ளடக்கத்துக்குச் செல்

வளையல் விற்ற படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வளையல் விற்ற படலம் என்பது சைவ சமய நூலான திருவிளையாடல் புராணத்தின் 32ஆம் படலமாகும் இது கூடல் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது இதில் 1724 முதல் 1759 வரை பாடலகள் இடம்பெற்றுள்ளன [1]

கதை

[தொகு]

தாருகாவனத்தில் இருந்த முனிவர்களின் மனைவிகள் அழகிலும் ஒழுக்கத்திலும் தாங்களே சிறந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தனர் இந்த எண்ணத்தை மாற்ற நினைத்தார் இறைவன் [2]

இரப்பவனாக வந்த இறைவன்

[தொகு]

புலித்தோலும் பட்டுக் கோணமும் உடுத்தி திருநீறும் உருத்திராட்சமும் அணிந்து கையில் திருவோட்டுடன் தாருகாவனத்திலுள்ள வீடுகளில் பிச்சைக் கேட்டு நின்றார் இறைவன், அவரின் அழகைக் கண்டு மயங்கிய முனிவர்களின் மனைவிகள் தங்களின் வளையல் மற்றும் மேகலையை அவரின் திருவோட்டில் இட்டனர் பின்னர் தெளிவுப் பெற்ற அப்பெண்கள் தங்களின் பொருட்களை திரும்ப தரும்படி கெஞ்சினர் ஆனால் அப்பொட்களை கொடுக்காது சென்றார் இறைவன், நடந்ததை அறிந்த முனிவர்கள் இரப்பவன் வடிவில் வந்த இறைவனை கண்டு மயங்கியதால் நீங்கள் வணிகர் குலத்தில் பிறந்து வாழ்வீரகள் என சபித்தனர், அப்பெண்கள் மீண்டும் தாங்கள் பழைய நிலைக்கு திரும்ப வேண்டினர், நீங்கள் வணிகர் குலத்தின் மகள்களாக வாழும் போது அங்கு வளையல் விற்க வரும் இறைவன் தங்களுக்கு வளையல் அணிவித்து இச்சாபத்திலிருந்து தங்களை விடுவிப்பார் என கூறினர் [2]

வளையல் விற்க வந்த இறைவன்

[தொகு]

பெற்ற சாபத்தால் வணிகர் குலத்தில் பிறந்து வளர்ந்தனர் அப்பெண்கள், அவர்களை சாபத்திலிருந்து விடுவிக்க எண்ணிய இறைவன் முற்பிறப்பில் தனக்கு அவர்கள் தந்த வளையல்களை எடுத்துக் கொண்டு வளையல் விற்பவனாக அவர்கள் வாழும் வீதியில் கூவிக் கொண்டு சென்றார் அதைக் கேட்ட அப்பெண்கள் வெளியே வந்து வளையலை வாங்கினர், இறைவன் அவர்களுக்கு வளையல் அணிவித்து விட்டு பணத்தை நாளை பெற்றுக் கொள்வதாக கூறி சென்றார், அப்பெண்கள் அவரை பின் தொடர்ந்தனர் அவர் கோவிலுக்குள் சென்று மறைந்து விட்டார், பின்பு தான் இங்கு வந்து தங்களை ஆட்கொண்டது இறைவன் என அப்பெண்களுக்கு தெரிந்தது பின் பல காலம் அங்கு வாழ்ந்த அப்பெண்கள் மீண்டும் முனிவர்களின் மனைவிகளாகும் பேறு பெற்றனர் [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திருவிளையாடல் புராணம் கூடல் காண்டம் பாகம் 1". Project Madurai. Retrieved 11 May 2025.
  2. 2.0 2.1 2.2 "வளையல் விற்ற படலம்". தினமலர். Retrieved 11 May 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளையல்_விற்ற_படலம்&oldid=4281818" இலிருந்து மீள்விக்கப்பட்டது