வளையபெண்டனோன்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
வளையபெண்டனோன் | |||
| வேறு பெயர்கள்
கீட்டோவளையபெண்டேன் அடிப்பிக்கு கீட்டோன் | |||
| இனங்காட்டிகள் | |||
| 120-92-3 | |||
| ChEBI | CHEBI:16486 | ||
| ChEMBL | ChEMBL18620 | ||
| ChemSpider | 8141 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| KEGG | C00557 | ||
| பப்கெம் | 8452 | ||
| வே.ந.வி.ப எண் | GY4725000 | ||
| |||
| UNII | 220W81TN3S | ||
| பண்புகள் | |||
| C5H8O | |||
| வாய்ப்பாட்டு எடை | 84.12 கி/மோல் | ||
| தோற்றம் | தெளிவானது, நிறமற்ற நீர்மம் | ||
| மணம் | peppermint-like | ||
| அடர்த்தி | 0.95 கி/செ.மீ3, நீர்மம் | ||
| உருகுநிலை | −58.2 °C (−72.8 °F; 215.0 K) | ||
| கொதிநிலை | 130.6 °C (267.1 °F; 403.8 K) | ||
| சிறிதளவு கரையும் | |||
| -51.63·10−6 செ.மீ3/மோல் | |||
| தீங்குகள் | |||
| GHS குறியீடு: | |||
விளக்கப்படங்கள் |
|||
குறியீட்டுச் சொல் |
எச்சரிக்கை | ||
இடர் அறிக்கைகள் |
H226, H315, H319 | ||
முன்னெச்சரிக்கை அறிக்கைகள் |
P210, P302+352, P305+351+338[2] | ||
| தீப்பற்றும் வெப்பநிலை | 26 °C (79 °F; 299 K) | ||
| பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | |||
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |||
வளையபெண்டனோன் (Cyclopentanone) என்பது C5H8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். (CH2)4CO என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். வளைய கீட்டோன் சேர்மமான இது நிறமற்றதாகவும் ஆவியாகக் கூடியதாகவும் கானாப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]உயர்ந்த வெப்பநிலையில் பேரியம் ஐதராக்சைடுடன் அடிப்பிக் அமிலத்தைச் சேர்த்து சூடுபடுத்தினால் கீட்டோனாக்கல் வினை நிகழ்ந்து வளையபெண்டனோன் உருவாகிறது:[3]
- (CH2)4(CO2H)2 → (CH2)4CO + H2O + CO2
பயன்கள்
[தொகு]வளையபெண்டனோன் வாசனை திரவியங்கள் தயாரிக்க உதவும் ஒரு பொதுவான முன்னோடிச் சேர்மமாகும். குறிப்பாக மல்லிகை மணம் இதனுடன் தொடர்பானது. 2-பெண்டைல்- மற்றும் 2-எப்டைல்வளையபெண்டனோன் ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்.[4] வளையபெண்டனோன் ஒரு பல்துறை செயற்கை இடைநிலை ஆகும். வளையபெண்டோபார்பிட்டால் தயாரிப்பதற்கான முன்னோடியாகவும் இச்சேர்மம் பயன்படுகிறது.[5]

பென்சிகுரான் என்ற பூச்சிக்கொல்லி மற்றும் வளையபெண்டமீன், பெண்டெத்தில்வளையனோன் போன்றவற்றைத் தயாரிக்கவும் வளையபெண்டனோன் பயன்படுத்தப்படுகிறது.[5]
கியூபேன்-1,4-டைகார்பாக்சிலேட்டு தயாரிக்க உதவும் முன்னோடியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. உயர் வெடிமருந்துகளான எப்டாநைட்ரோகியூபேன் மற்றும் ஆக்டாநைட்ரோகியூபேன் போன்ற பிற மாற்று கியூபேன்களை தயாரிக்கவும் இது பயன்படுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Merck Index, 11th Edition, 2748.
- ↑ Sigma-Aldrich Co., Cyclopentanone.
- ↑ J. F. Thorpe and G. A. R. Kon (1925). "Cyclopentanone". Organic Syntheses 5: 37. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV1P0192.; Collective Volume, vol. 1, p. 192.
- ↑ Johannes Panten and Horst Surburg "Flavors and Fragrances, 2. Aliphatic Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2015, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.t11_t01
- 1 2 Hardo Siegel (2005). Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a15_077. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-30673-2.
- ↑ Bliese, Marianne; Tsanaktsidis, John (1997). "Dimethyl Cubane-1,4-dicarboxylate: A Practical Laboratory Scale Synthesis" (in en). Australian Journal of Chemistry 50 (3): 189. doi:10.1071/C97021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-9425. http://www.publish.csiro.au/?paper=C97021.

