வளையபுரோப்பேன் டிரையோன்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
வளையபுரோப்பேன்-1,2,3-டிரையோன் | |
| இனங்காட்டிகள் | |
| 76719-55-6 | |
| ChemSpider | 35786973 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 58556001 |
| |
| பண்புகள் | |
| C3O3 | |
| வாய்ப்பாட்டு எடை | 84.03 கி/மோல் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
வளையபுரோப்பேன் டிரையோன் (Cyclopropanetrione) என்பது C3O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூவாக்சோவளையபுரோப்பேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இது அதிகம் அறியப்படாத ஒரு கார்பன் ஆக்சைடு ஆகும். மூன்று கார்பன் அணுக்கள் கொண்ட ஒரு வளையத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஓர் ஆக்சிசன் அணுவுடன் இரட்டைப் பிணைப்பால் இணைக்கப்பட்டுள்ளது. மாற்றாக, இதை கார்பன் மோனாக்சைடின் ஒரு டிரைமர் என்றும் கருதலாம். இந்தச் சேர்மம் வெப்ப இயக்கவியல் ரீதியாக நிலையற்றது என்றும், கார்பன் மோனாக்சைடாகப் பிரியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.[1] மேலும் இது பெருமளவில் உற்பத்தி செய்யப்படவில்லை. இருப்பினும், வளையபுரோப்பேன் டிரையோன் அல்லது அதன் திறந்த-சங்கிலி ஒப்புருவான •(CO)3• என தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட C3O3 மூலக்கூறுகள், நிறை நிறமாலையியல் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.[2]
1975 ஆம் ஆண்டு முதல் அறியப்பட்டு வரும் தெல்டேட்டு எதிர்மின்னயனியின் (C₃O₃²⁻) நடுநிலைச் சமவடிவமாக இதைக் கருதலாம்.[3][4] இதற்கு இணையான ஒரு நீரேற்றான வளைய ஐதராக்சிகுளோரோபுரோப்பேன் (அல்லது சைக்ளோபுரோபேன்-1,1,2,2,3,3-எக்சால்), (-C(OH)₂-)₃ என்பதும் உள்ளது. இது தொடக்கநிலை ஐதராக்சில் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Corkran, Greg; David W. Ball (2004). "The relative energies of cyclopropanone, cyclopropanedione, and cyclopropanetrione. Hartree–Fock, density-functional, G2, and CBS calculations". Journal of Molecular Structure: THEOCHEM 668 (2–3): 171–178. doi:10.1016/j.theochem.2003.10.026. பன்னாட்டுத் தர தொடர் எண்:0166-1280.
- ↑ Schröder, Detlef; Helmut Schwarz; Suresh Dua; Stephen J. Blanksby; John H. Bowie (1999). "Mass spectrometric studies of the oxocarbons CnOn (n = 3–6)". International Journal of Mass Spectrometry 188 (1–2): 17–25. doi:10.1016/S1387-3806(98)14208-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1387-3806. Bibcode: 1999IJMSp.188...17S. https://archive.org/details/sim_international-journal-of-mass-spectrometry_1999-05-17_188_1-2/page/17.
- ↑ Eggerding, David; Robert West (1975). "Synthesis of dihydroxycyclopropenone (deltic acid)". Journal of the American Chemical Society 97 (1): 207–208. doi:10.1021/ja00834a047. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. Bibcode: 1975JAChS..97..207E.
- ↑ Eggerding, David; Robert West (1976). "Synthesis and properties of deltic acid (dihydroxycyclopropenone) and the deltate ion". Journal of the American Chemical Society 98 (12): 3641–3644. doi:10.1021/ja00428a043. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. Bibcode: 1976JAChS..98.3641E.
- ↑ Skujins, S.; J. Delderfield, G.A. Webb (1968). "A mass spectrometric study of some monocyclic polycarbonyl compounds". Tetrahedron 24 (13): 4805–4817. doi:10.1016/S0040-4020(01)98676-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-4020.