வளைகுடா விமானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gulf Air
IATA ICAO அழைப்புக் குறியீடு
GF GFA GULF AIR
நிறுவல்1950
மையங்கள்Bahrain International Airport
அடிக்கடி பறப்பவர் திட்டம்Gulf Air Frequent Flyer Programme
வானூர்தி எண்ணிக்கை36 (+59 orders)
சேரிடங்கள்45
தலைமையிடம்Muharraq, Bahrain
முக்கிய நபர்கள்Samer Majali, CEO
Talal Al-Zain , Chairman
வலைத்தளம்http://www.gulfair.com

வளைகுடா விமானம் (அரபு மொழி: طيران الخليجதயரான் அல் கலீஜ், ஆங்கிலம் : Gulf Air) என்பது பஹ்ரைன் நாட்டு அடையாள வான்வழி நிறுவனம். பஹ்ரைன் பன்னாட்டு விமான நிலையத்தை மையம் கொண்ட இவ்வான்வழி 45 இடங்களுக்கும் 28 நாடுகளுக்கும் பறக்கிறது.

குறியீடு ஒப்பந்தம்[தொகு]

இவ்வான்வழி இதர வான்வழி நிறுவங்களுடன் வான்வழி கூட்டு ஒப்பந்தம் (airline agreements) வைத்திருக்கப்படவில்லை என்றாலும் இந்தியாவின் ஜெட் வான்வழி மற்றும் ஓமான் விமானம் ஆகிய நிறுவங்களுடன் தொடர்பயணியர் திட்டங்களில் (frequent flier programs) குறியீடு ஒப்பந்தம் வைத்துள்ளது (code-share agreements).

வரலாறு[தொகு]

வளைகுடா பறப்பியல் (Gulf Aviation)[தொகு]

இந்நிறுவனம் 1945இல் தொடக்கிவைக்கப்பட்டது. 1940களில் தோஹாவிற்கும் பஹ்ரைனிற்கும் இடையே வாடகை விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனத்தை தொடக்கி வைத்த போஸ்வோர்த் என்பவர் "வளைகுடா பறப்பியல்" (Gulf Aviation) என்கிற பெயரில் நிறுவனத்தை பதிவு செய்தார்.

புதிய பறப்புக்கள்[தொகு]

பிறகு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் புதிய பறப்புக்கள் சேர்க்கப்பட்டது. இவர் ஒரு செயல் விளக்கப் பறப்பில் மரணம் அடைந்தார். 1951இல் பிரித்தானிய வெளிநாட்டு பறப்பியல் நிறுவனம் (British Overseas Aviation Corporation-BOAC) இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது. 1978இல் கத்தார், பஹ்ரைன், ஓமான் ஆகிய அரசாங்கங்கள் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கின.

வணிகப்பெயர் மாற்றம்[தொகு]

பிறகு இந்நிறுவனத்திற்கு வணிகப்பெயர் மாற்றம் (re-branding) செய்யப்பட்டது. 1980களில் ரியாத், ஃபிரான்க்ஃபுர்ட், டமஸ்கஸ், இஸ்தான்புல் ஆகிய இடங்களுக்கு பறப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளைகுடா_விமானம்&oldid=3925690" இலிருந்து மீள்விக்கப்பட்டது