வளியுயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வளியுயிரியல் (Aerobiology) என்பது வளிமண்டலத்தில் உலாவும் உயிர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க உயிர்கள் சம்பந்தப்பட்ட பொருள்களைப் பற்றிய படிப்பாகும். இதில் உயிர்/கரிம பொருட்களின் ஆக்கம், இடம்பெயர்தல், எடுத்துக்கொளல், பரவல், இணக்கம், சேர்தல், காற்றில் பரவும் மகரந்தம், வித்து, விதை இவைகளின் நோய் தொற்று/ பரப்பின் வீரியம் இதில் பரவிக்கிடக்கும் தீநுண்மங்கள், பூஞ்சான்கள், பாக்டீரியாக்கள் மற்றும் சிறுப் பூச்சிகளான தத்துப்பூச்சிகள், கொசுக்கள் ஏனையப் பல பூச்சிகள் நோய்தொற்று காரணிகளை பரப்பும் விதம் ஆகியவைகளை உள்ளடக்கியது.

இதில் பெரும்பாலும் உழவு சம்பந்தப்பட்ட பூச்சிகளான கல்வெட்டுக்கிளிகள், புதரீக்கள் மற்றும் அந்துப்பூச்சிகள் சார்ந்தவையே பெறிதும் அறியப்படுகின்றன.

உள்ளடக்கம்[தொகு]

உயிர்களின் அசைவு, காற்று மற்றும் சிறுபொருட்களால் வளிமண்டலத்திற்கு ஏற்படும் மாற்றங்களையும் அதனால் உயிர்களுக்கு அல்லது உழவிற்கு வருவதை விவசாய வானிலையாளர்கள் கண்காணிக்கின்றனர். 0.1 µm குறைவாக உள்ள சிறுபொருட்கள் குறிப்பாக தீநுண்மங்கள் நிறந்தரமாக வளிமண்டலத்தில் குடிகொண்டுள்ளன. இவ்வாறு உலாவும் சிறு பொருட்கள் அதன் சொந்த அசைவுகளல்லாது பிற விசைகளின் வேகத்தால் உட்படுத்தப்படுகின்றன. இதை நாம் பிரௌனியன் இயக்கம் என்கிறோம். இவ்வாறு வளிமண்டலத்தில் மிதக்கும் பொருட்களானது ஒரு நிறந்தரத்தன்மை என்பது கேள்விக்குறியாகவும், தனக்கே ஒத்த வேகத்துடன் இடமாறிச் செல்வதும் இயல்பாக உள்ளது. வளிமண்டலத்தில் வீற்றிருக்கும் உயிர்களில் விவாசயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் உயிரிகள் 0.1 லிருந்து 100 µm க்குள் தான் மிகுந்து காணப்படுகின்றன. 100 µmக்கும் அதிகமாக இருக்கும் பொருளானது குறிப்பிட்டு சொல்லப்படும் காலக்கெடுவைப் பெற்றில்லாமல், அவைகள் வேகமான காற்று, வளிமண்டலத்தில் பறந்து செல்லும் உயிர்களான வௌவால்கள், பறவைகள் மற்றும் பூச்சிகளின் வேகத்திற்கு பெறொதும் ஆட்கொள்ளப்படுகின்றன.

பயன்கள்[தொகு]

 • காற்றில்/வளி மண்டலத்தில் உலாவும் உயிர்களைப் பற்றியறிய முடியும்.
 • காற்றில் புதிதாக பரவிவரும் நோய்க்காரணிகள், அவைகளின் தன்மைகள் ஆகியவைகளை ஆறிய முடியும்.
 • வளிமண்டலத்தில் மிகுந்திருக்கும் நோய்க்காரணிகள் மற்றும் பீடைகளை அறியும் முறைகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளையும் அறிய முடியும்.
 • பயிர்ப்பாதுகாப்பு, பயிர் நோய்தாக்கு, தீங்கிழைக்கும் பூச்சிகள் ஆகியவற்றை அறிவதன் மூலம் இதன் வளர்ச்சி மற்றும் பொருளாதார சீர்திருத்தம் அடைய முடியும்.
 • பல பாதுகாப்பு முறைகளை மேம்படுத்திக் கொள்ள இத்துறை உதவுகிறது.

சான்று மற்றும் மாதிரி[தொகு]

இவ்வுயிர்களை அளக்க பலத் தரப்பட்ட தரங்கள் பயனப்டுத்தப்படுகின்றன. இவைகளில் குறிப்பிடத்தக்க சில பொருட்களில் கிடைக்கும் தரவுகளை மாதிரிகளாக கொண்டு இயங்குகின்றன.

 • வானிலைத் தரவு
 • வளி/காற்றினால் கிடைக்கும் தரவு
 • காற்று அதன் சூழ்நிலைகளை அளந்து அறிகின்றனர்
 • வெப்பநிலைத் தரவு
 • பனிப்பொழிவு மற்றும் வளிமண்டலத்தின் இரப்பதம்
 • கதிர்வீச்சு மற்றும் மாற்றங்கள்
 • தொலை உணர்வுத் தரவு
 • காற்றில் உள்ள மாசு அதனால் அறியப்படும் மாற்றம்
 • பூச்சிகளின் இடம் பெயர்ச்சி
 • உயிரியலாளர்களின் துணைக் கொண்டு அறியப்படும் தரவு ஆகியவைகளை மூலமாக கொண்டு இயங்குகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

 • Mandal J, Roy J, Chatterjee S and S Gupta – Battacharya, 2008, Aerobiological investigation and invitro studies of pollen grains from 2 dominant avenue trees in Kolkata, India, J Investig Allergol Clin Immunol. 18(1):22-30
 • Singh AB, 1984, Aerobiological studies in India in relation to allergy, Indian J Pediat, 51: 345 – 348
 • Perlman F, 1958, Insects as inhalant allergens: consideration of aerobiology, biochemistry, preparation of material and clinical observations, Journal of Allergy, 29(4): 302 - 328
 • http://www.wamis.org/agm/gamp/GAMP_Chap15.pdf

மேலும் வாசிக்க[தொகு]

 • Stetzenbach LD, 2007, Title: Introduction to aerobiology, Manual of Environmental Microbiology, 925 – 938. ISBN 978-1-55581-379-6

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளியுயிரியல்&oldid=2744627" இருந்து மீள்விக்கப்பட்டது