வளிம விரிவுக் குணகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளிமத்தின் பருமன் விரிவுக் குணகம் (Volume coefficient of a gas) என்பது, அழுத்தம் மாறாதிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வளிமத்தின் வெப்பநிலையினை 1 °C அதிகரிப்பதால் தோன்றும் பருமன் அதிகரிப்பிற்கும் அதே பொருண்மையுடைய வளிமத்தின் 0 °C வெப்பநிலையில் உள்ள பருமனளவிற்குமுள்ள விகிதம் அந்த வளிமத்தின் பருமன் விரிவுக் குணகம் எனப்படும். இது α என்று குறிக்கப்படும். இதன் மதிப்பு 0.0036 அல்லது 1/273 ஆகும்.

வளிமத்தின் அழுத்த விரிவுக் குணகம் (Presure coefficient of a gas) என்பது பருமனளவு மாறாது இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வளிமத்தின் வெப்பநிலையினை 1 °C அதிகரிப்பதால் தோன்றும் அழுத்தப் பெருக்கத்திற்கும் அதே நிறையுடைய வளிமத்தின் 0 °C வெப்பநிலையில் உள்ள அழுத்திற்கும் உள்ள விகிதம் அந்த வளிமத்தின் அழுத்த விரிவுக் குணகம் எனப்படும். இது β என்று குறிக்கப்படும்.

β =0.0036.= 1/273 க்குச் சமம்.

ஒரு வளிமத்தின் α மதிப்பும் β மதிப்பும் சமமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளிம_விரிவுக்_குணகம்&oldid=2745932" இலிருந்து மீள்விக்கப்பட்டது