வளர்மாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளர்மாற்றம் (Anabolism) என்பது வளர்சிதை மாற்றத்தின் ஒரு கூறாகும். வளர்மாற்றம் எனப்படுவது, ஆக்கப்பூர்வமான வளர்சிதை மாற்ற செயல்முறைகளின் உயிர்ப்பொருள் தொகுப்பாகும். அதாவது சிதைமாற்றத்தின் மூலம் வெளியிடப்படும் ஆற்றலைப் பயன்படுத்திச் சிக்கலான மூலக்கூறுகளை தொகுக்கும் செயல்முறையாகும். பொதுவாக, கண்ணறைக் கட்டமைப்புகளை அல்லது உயிரணுவின் உள்ளமைப்புக்களைத் தோற்றுவிக்கும் சிக்கலான மூலக்கூறுகள், சிறிய மற்றும் எளிய முன்னோடிகளிலிருந்து படிப்படியாக கட்டமைக்கப்படுகின்றன. இச் செயல்முறை மூன்று அடிப்படை நிலைகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, இது அமினோ அமிலங்கள், ஒற்றைச்சர்க்கரைகள், ஐசோப்பிரினாயிடுகள், கருக்காடிக்கூறுகள் ஆகிய முன்னோடிகளை உற்பத்தி செய்கிறது. இரண்டாவதாக, அடினோசின் முப்பொசுபேற்றிலிருந்து ஆற்றலைப் பெற்றுக்கொண்டு தொழிற்படும் வடிவங்களாக மாற்றி அமைக்கப்படுகின்றன. மூன்றாவதாக, இந்த முன்னோடிகளிலிருந்து புரதங்கள், கூட்டுச்சர்க்கரைகள், கொழுமியங்கள், கருவமிலங்கள் போன்ற சிக்கலான மூலக்கூறுகள் தொகுக்கப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. de Bolster, M.W.G. (1997). "Glossary of Terms Used in Bioinorganic Chemistry: Anabolism". International Union of Pure and Applied Chemistry. Archived from the original on 2017-01-21. பார்க்கப்பட்ட நாள் 2007-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்மாற்றம்&oldid=3588126" இலிருந்து மீள்விக்கப்பட்டது