வளர்மதி (செயற்பாட்டாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளர்மதி (Valarmathy) இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் வீராணத்தை அடுத்துள்ள பள்ளிகொடுத்தானுார் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். வளர்மதியின் தந்தை பெயர் மாதையன். தாயார் பெயர் கமலா. சமீபத்தில் நெடுவாசல் கிராமத்தில் ஐதரோகார்பன் திட்டத்தை இரத்து செய்யக்கோரி 2017 சூன் 12 ஆம் தேதி சேலம் பெண்கள் அரசு கல்லுாரி வளாகத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த காரணத்திற்காக சமூகச் செயற்பாட்டாளர் வளர்மதி கைது செய்யப்பட்டார். சூன் 17 ஆம் தேதி அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.[1] மாணவி வளர்மதி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது. இதனை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.[2]இவர் தமிழ்நாடு பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தின் சேலம் மாவட்ட பொறுப்பாளர் ஆவார். தற்போது பெரியார் பல்கலைக் கழகத்தில் முதுநிலை இதழியல் படித்து வருகிறார்.[3]இவர் முன்னதாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விவசாயம் படித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது: உயர்நீதிமன்றம்". பிபிசி. 5 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "போராட்டமே என் முழு நேரப்பணி". தி இந்து. அக்டோபர் 1. 2007. 
  3. "குண்டர் சட்டத்தில் கைதான மாணவி வளர்மதி". தி இந்து. 2 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்மதி_(செயற்பாட்டாளர்)&oldid=3438980" இலிருந்து மீள்விக்கப்பட்டது