வளர்ச்சிமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாவர வளர்ச்சிமானி

.

தாவர வளர்ச்சிமானி (Auxanometer), என்பது தாவரங்களின் வளர்ச்சி வீதத்தை அளவிடும் கருவி ஆகும். கிரேக்க மொழியில் ஆக்சின் (AUXAIN) என்பது வளர்ச்சி என்றும் மீட்டர் (METRON) என்பது அளவிடுதல் என்றும் பொருள்படும்.[1][2]

வில் வளர்ச்சிமானி[தொகு]

வில் வளர்ச்சிமானியில் (arch Auxanometer) கம்பியின் ஒருமுனை தாவரத்தின் நுனிப்பகுதியிலும் மற்றொருமுனை வில்லுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பியானது கப்பியினுள் செல்லுமாறு பொருத்தப்பட்டு அந்தக்கப்பியில் ஒரு சுட்டிக்காட்டி இணைக்கப்பட்டுள்ளது. தாவரத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்போது கப்பி சுழன்று சுட்டிக்காட்டி வட்ட அளவுகோல் வழியாக நகர்ந்து தாவரத்தின் வளர்ச்சி அளவிடப்படுகிறது.

உணர்திறன் வளர்ச்சிமானி[தொகு]

உணர்திறன் வளர்ச்சிமானி (sensitive auxanometer) தாவரத்தின் நுண்ணிய வளர்ச்சியை அளவிட உதவுகிறது. இதில் மைக்ரோமீட்டர் எனும் நுண்ணிய அளவை பொருத்தப்பட்டுள்ளது.[3] இந்த அளவையானது வளிமண்டல அமைப்பில் ஏற்படும் குறுகியகால மாற்றத்தையும் அதன்மூலம் தாவரங்களில் ஏற்படும் துலங்கல்களையும் அளவிட உதவுகிறது.

பயன்பாடு[தொகு]

ஆக்ஸனோமீட்டர்கள் ஆய்வகங்களிலும் களப்பயன்பாட்டிற்கும், மற்றும் வகுப்பறைகளிலும் பயன்படுகிறது. இது தாவர வளர்ச்சிவில்காட்டி எனவும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1.   "Auxanometer". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press. 
  2. W. T. Bovie; W. T. Bovie (1915), "A Simplified Precision Auxanometer", American Journal of Botany, 2 (2): 95–99, doi:10.2307/2435215, JSTOR 2435215
  3. Bovie, W. T. (1912), "A Precision Auxanometer", Botanical Gazette, 53 (6): 504, doi:10.1086/330848
"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்ச்சிமானி&oldid=2352274" இருந்து மீள்விக்கப்பட்டது