வல்லம் கோட்டை முனியாண்டவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோயில் முகப்பு

வல்லம் கோட்டை முனியாண்டவர் கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் பகுதியில் உள்ள கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

தஞ்சாவூர்-திருச்சி நெடுஞ்சாலையில் தஞ்சாவூரிலிருந்து கிழக்கே உள்ள வல்லம் என்ற இடத்தில் உள்ளது. வஜ்ஜிரேசுவரர் கோயிலுக்கு அடுத்து இக்கோயில் அமைந்துள்ளது.

இறைவன்[தொகு]

இக்கோயிலிலுள்ள மூலவராக முனியாண்டவர் உள்ளார். மாடத்தில் விளக்கு ஏற்றப்பட்ட நிலையில் காணப்படுகிறது.அருகில் அதிக எண்ணிக்கையில் சூலங்களும், வேல்களும் காணப்படுகின்றன. முனியாண்டவருக்குப் பின் பெரிய ஆல மரம் உள்ளது.

பிற சன்னதிகள்[தொகு]

முனியாண்டவரின் வலது புறம் மதுரை வீரன் உள்ளார். இடது புறத்தில் கருப்புசாமி, அம்மன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் மாடங்களில் காணப்படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]