உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லமை தாராயோ (வலைத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லமை தாராயோ
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்து
இயக்கம்சிதம்பரம் மணிவண்ணன்
நடிப்பு
 • ஷாலி நிவேகாஸ்
 • கௌஷிக்
 • விஜே பார்வதி
 • சுபாஷிணி கண்ணன்
 • சரண்யா ரவிச்சந்திரன்
முகப்பு இசைகே.சி. பாலசாரங்கன்
பிண்ணனி இசைகே.சி. பாலசாரங்கன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்80
தயாரிப்பு
ஒளிப்பதிவு
தொகுப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்விகடன் ஒளித்திரை
மோஷன் கன்டென்ட் குரூப்
ஒளிபரப்பு
அலைவரிசைவிகடன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்26 அக்டோபர் 2020 (2020-10-26) –
2 பெப்ரவரி 2021 (2021-02-02)

வல்லமை தாராயோ (Vallamai Tharayo) என்பது 26 அக்டோபர் 26 2020 முதல் 2 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு வரை விகடன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணைய அலைவரிசையில் ஒளிபரப்பான வலைத் தொடர் ஆகும். இத்தொடர் இந்தியாவிலேயே முதன் முறையாக யூடியூப் இணையம் வழியாக ஒளிபரப்பாகும் வலைத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரை விகடன் ஒளித்திரை மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் போன்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க கோலங்கள் தொடர் புகழ் திருச்செல்வம் என்பவர் கதை மற்றும் திரைக்கதை எழுத, சிதம்பரம் மணிவண்ணன் இயக்குகிறார்.[3]

இத்தொடரில் ஷாலி நிவேகாஸ், கௌஷிக், விஜே பார்வதி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிடட பலர் நடிக்துள்ளனர். உத்ரா உன்னிகிருஷ்ணன்[4] குரலில் பாலசாரங்கன்இசையில் முகப்பு பாடல் அமைந்துள்ளது.[5]

நடிகர்கள்[தொகு]

 • ஷாலி நிவேகாஸ்[6] - அபி
 • கௌஷிக் - சித்தார்த்
 • விஜே பார்வதி
 • சுபாஷிணி கண்ணன்
 • சரண்யா ரவிச்சந்திரன்

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரில் மாதிரி நடிகை மற்றும் தொகுப்பாளினியான ஷாலி நிவேகாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் 2018ஆம் ஆண்டு தென்னிந்திய அழகு போட்டியில் பங்கு பெற்றவர் மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வணக்கம் தமிழா' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக 'இந்தியாக்ளிட்ஸ்' என்ற இணையத்தள தொகுப்பாளரான கௌசிக் கதாநாயகனாக நடிக்கின்றார். விஜே பார்வதி மற்றும் திரைப்பட நடிகை சுபாஷிணி கண்ணன், சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

தயாரிப்பு[தொகு]

இந்த தொடரை கோலங்கள், அழகி, திருமதி செல்வம், தென்றல், தெய்வமகள், நாயகி போன்ற பல வெற்றி தொடர்களை இயக்கிய விகடன் ஒளித்திரை என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இவ் நிறுவனம் தயாரிக்கும் முதல் இணையத் தொடர் இதுவாகும். இதனுடன் இணைத்து 'மோஷன் கன்டென்ட் குரூப்' என்ற நிறுவனமும் இத்தொடரை தயாரித்துள்ளது.

மொழி மாற்றம்[தொகு]

இந்த தொடர் தெலுங்கு மொழியில் 'ஓ சின்னதான' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 1 பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு 'இ டிவி' தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[7] மலையாள மொழியில் ஆதாமின்டே வாரியெல்லு என்ற பெயரில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு என்ற அலைவரிசையில் மார்ச் 14, 2021 ஆம் ஆண்டு முதல் பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது.[8]

நாடு மொழி அலைவரிசை தலைப்பு
இந்தியா தெலுங்கு இ டிவி ஓ சின்னதான
இந்தியா மலையாளம் மழவில் மனோரமா ஆதாமின்டே வாரியெல்லு

மேற்கோள்கள்[தொகு]

 1. "Vikatan launches India's first digital daily series - 'Vallamai Tharayo'". exchange4media. 04-11-2020. பார்க்கப்பட்ட நாள் 7-11-2020. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)
 2. "`டிவி சீரியல்களுக்கும் `வல்லமை தாராயோ'-வுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு!' – திருச்செல்வம்". topnewsthamizh.com. 23-10-2020. பார்க்கப்பட்ட நாள் 7-11-2020. {{cite web}}: Check date values in: |access-date= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
 3. "விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து இந்தியாவின் முதல் டிஜிட்டல் டெய்லி சீரிஸ் ஒன்றை வெளியிட இருக்கின்றனர்". cinema.vikatan.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 4. "உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் பாலசாரங்கன் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலின் ப்ரோமோ, வீடியோ வடிவில் இதோ..." cinema.vikatan.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 5. "வல்லமை தாராயோ - "முதல் எபிசோடுக்கே 5 ஸ்டார் ரேட்டிங்!"". cinema.vikatan.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 6. "`வல்லமை தாராயோ' ஷாலி நிவேகாஸ்... எக்ஸ்க்ளூசிவ் போட்டோஷூட் ஸ்டில்ஸ்!". cinema.vikatan.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 7. "Vallamai Tharayo, India's first digital daily series, premieres on ETV Telugu". www.exchange4media.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 8. "Aadaminte Vaariyellu Flowers TV Serial Launching on 14th March at 1:30 P.M". www.keralatv.in. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]