உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லநாடு திருமூலநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வல்லநாடு திருமூலநாதர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ள சிவாலயமாகும். [1] இச்சிவாலயம் நவலிங்கபுரத்தில் தலைக்கோயிலாக கொண்டாடப்படுகிறது. இச்சிவாலயத்தின் மூலவர் திருமூலநாதர் என்றும், அம்பிகை ஆவுடையம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்,

இக்கோயில் கிபி 1553 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இத்தலத்தினை செயங்கொண்ட பாண்டியபுரம் என்றும். செயங்கொண்ட பாண்டிய நல்லூர் என்றும் அழைக்கப்பட்டுவந்துள்ளது.

தலச்சிறப்பு

[தொகு]

இத்தலத்தின் மூலவர் மீது செப்டம்பர், மார்ச் மாதங்களில் 21,22,23 ஆகிய நாட்களில் சூரிய ஒளி விழுகிறது.

சந்நதிகள்

[தொகு]

மூலவரான திருமூலநாதர் சுயம்பு. மூலவரை ஞான ஹிருதேயேஸ்வரர் என்றும் வழங்குகிறார்கள். இவர் அபிசேகத்தில் கரைந்துவிடக்கூடாது என்பதால் குவளை சாத்தப்பட்டுள்ளது. அம்பிகை ஆவுடையம்மன் கிழக்கு நோக்கி உள்ளார்.

அம்மன் சந்நதிக்கு முன்பு விநாயகர் சந்நதி உள்ளது. சொக்கர் மீனாட்சி, தாமரை வடிவிலான நவகிரகம், சூரியன், சந்திரன், அறுபத்து மூன்று நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, கன்னி மூலை கணபதி, பஞ்சலிங்கம், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், சனீஸ்வரர், நடராஜர் மற்றும் பைரவர் சந்நிதிகள் உள்ளன,

ராஜா ராணியின் சிலை மண்டபத்தில் உள்ளது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. தினகரன் ஆன்மிக மலர் 05.03.2016 மனநோயாளிகளுக்கு மறுவாழ்வுதரும் மகேஸ்வரன் - முத்தாலங்குறிச்சி காமராசு பக்கம் 18-19