வல்லங்கிழவோன் நல்லடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்லடி என்பவன் சங்ககால சோழ நாட்டின் வல்லம் என்ற ஊரை ஆண்ட சீறூர் மன்னர் ஆவான். இவன் சோழர் குடியோடு மகட்கொடை கொண்டு அச்சோழரின் மருமகனாய் இருந்தவன். நல்ல தேர்களையும், கடும்பக்கட்டு யானைகளையும் கொண்ட இவன் நல்ல ஆற்றல் மிக்கவனாய் கூறப்படுகிறான். இவனுடய ஆற்றலறியா பகைவர்கள் இவனுடைய வல்லத்தை கைப்பற்ற முயன்றனர் என்ற ஒரு தகவல் மட்டும் பரணர் என்பவரின் பாட்டு வழி அறியலாம்.அகம் 356

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லங்கிழவோன்_நல்லடி&oldid=3419060" இலிருந்து மீள்விக்கப்பட்டது