வல்சாடு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வல்சாடு வட்டம், இந்திய மாநிலமான குஜராத்தின் வல்சாடு மாவட்டத்தில் உள்ளது.

அரசியல்[தொகு]

இந்த வட்டம் முழுவதும் வல்சாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இந்த வட்டத்தில் உள்ள சில ஊர்கள் தரம்பூர் சட்டமன்றத் தொகுதியிலும், மற்ற சில ஊர்கள் வல்சாடு சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

மக்கள்[தொகு]

இந்த வட்டத்துக்கான மக்கள்தொகை விவரங்கள்:[2]

விவரம் ஆண்கள் பெண்கள் மொத்தம்
மக்கள் 212,179 202,961 415,140
பிற்படுத்தப்பட்டோர் 5,517 5,370 10,887
பழங்குடியினர் 73,537 73,793 147,330
கல்வியறிவு உடையோர் 178,465 156,440 334,905

போக்குவரத்து[தொகு]

இந்த வட்டத்தில் உள்ள பெரும்பாலான ஊர்கள் மாவட்ட சாலையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வட்டத்தின் ஊடாக மாநில நெடுஞ்சாலைக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் வழியமைக்கப்பட்டுள்ளது. வல்சாடில் தொடருந்து நிலையம் உள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-14.
  2. வல்சாடு வட்டம் - விவரங்கள் : இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறையின் இணையத்தளம் (ஆங்கிலத்தில்)

இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
category:Valsad
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்சாடு_வட்டம்&oldid=3570923" இலிருந்து மீள்விக்கப்பட்டது