வலை 2.0
Appearance
வலை 2.0 (web 2.0) எனும் சொல், வைய விரிவு வலையில் பரந்துள்ள இரண்டாந்தலைமுறை இணையச்சேவைகளை குறிக்க பயன்படுகிறது.
முதலாந்தலைமுறையோடு ஒப்பிடும்போது, வலை 2.0 ஆனது முதல் தலைமுறையின் மரபான நிலையான வலைப்பக்கங்களை தாண்டி, பொதுவாக கணினியில் பயன்படுத்தும் செயலிகள் போன்ற அனுபவத்தை பயனர்களுக்கு கொடுக்கத்தக்க வலைச்சேவைகளை கொண்டிருக்கிறது.
வலை 2.0 வலைச் செயலிகள், 1990 களிலேயே முகிழ்க்கத்தொடங்கிவிட்ட சில தொழிநுட்பங்களை பொதுவாக பயன்படுத்துகிறது.
- public web service APIs (1998)
- ஏஜாக்ஸ் (1998)
- செய்தியோடை (1997)
போன்றவை அவற்றுள் சிலவாகும்.
இச்சேவைகள் பெருமெடுப்பிலான பிரசுரிப்பை, தகவல் பகிர்வை அனுமதிக்கின்றன. இந்த கருத்துருவமானது விக்கி கள், வலைப்பதிவுகள் போன்றனவற்றையும் உள்ளடக்குகின்றது.