வலை பார்வையாளர்கள் அளவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலை பார்வையாளர்கள் அளவீடு (Web Audience Measurement) என்பது இந்தியாவில் இணைய பயன்பாட்டை அளவிடப் பயன்படும் பார்வையாளர்கள் அளவீடும் இணையதள பகுப்பாய்வும் என்ற கருவியைக் குறிக்கிறது. பன்னாட்டு இந்திய சந்தை ஆராய்ச்சி பணியகமும் இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி கழகம் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியே இத்திட்டமாகும். எட்டு பெருநகர மையங்களில் 6000 பேருக்கும் மேற்பட்ட தனிநபர்களிடம் இவ்வமைப்பு பன்முகத்தன்மையான ஆய்வுகளை மேற்கொண்டது. இணையதளப் பயன்பாட்டு நேரம், காட்சிப்படுத்தல் நேரம், சென்றடைதல் மற்றும் கால இடைவெளி உள்ளிட்ட கூறுகள் இணையப் பயன்பாட்டு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சில அளவீடுகளாகும். [1]

வலை பார்வையாளர்கள் அளவீடு பார்வையாளர்களின் அளவீட்டைப் பயன்படுத்துகிறது. பாலினம், பிரிவு மற்றும் இருப்பிடத்தால் பிரிக்கப்பட்ட பார்வையாளர்களின் இணைய பயன்பாட்டை இக்கருவி தொடர்ச்சியாக கண்காணித்து குழு ஆய்வு செய்து குறுக்கு வெட்டு தரவை வழங்குகிறது.[2] இந்த குழு அடிப்படையிலான அணுகுமுறை கணினிகளைக் கண்காணிக்கும் இந்திய சூழலுக்கான வடிவமைப்பாகும். இது அளவீட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது,

வலை மதிப்பீட்டுப் புள்ளி காரணி இணையதள விளம்பரதாரர்களுக்கு மேலும் விரிவான ஒரு பார்வையை வழங்குகிறது. இணையப் பயன்பாட்டின் பல அளவுகோல்களையும், இந்தியாவில் வலை பகுப்பாய்வுகளை மேலும் தரப்படுத்தவும் இக்காரணி முயற்சிக்கிறது. இணைய பகுப்பாய்வு நிறுவனச்சந்தை தற்போது பிளவுபட்டுள்ளது. காம்சுகோர் மற்றும் விசிசென்சு அமைப்புகள் பன்னாட்டு இந்திய சந்தை ஆராய்ச்சி பணியகத்திற்கு முக்கிய போட்டியாளர்களாக உள்ளன. இலக்கமுறை பார்வையாளர்கள் அளவீட்டு மதிப்பாக அனைத்து போட்டியாளர்களாலும் வழங்கப்பட்ட எண்களுக்கு இடையிலான வேறுபாட்டைச் சுற்றி பல விவாதங்கள் நடைபெறுகின்றன. எனவே, ஊடக பங்குதாரர்களுக்கு சரியான அளவீட்டு கூட்டாளரைத் தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது. [3] இதனால் இரண்டு வெவ்வேறு பார்வையாளர் அளவீட்டு கருவிகளின் பயனர்களிடையே பிளவுகள் உருவாகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindubusinessline.in/2010/11/02/stories/2010110251500900.htm
  2. Pahwa, Nikhil (3 November 2010). "Part 1: How IMRB's Web Audience Measurement Tracks Usage".
  3. "Audience Measurement Cocktails: Which one gets you the… HIGH?? - Webalue.com Communications - Posted in Advertising -". 2011-07-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-05 அன்று பார்க்கப்பட்டது.