வலைவாசல் பேச்சு:தமிழிலக்கியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழிலக்கியம் எனும் இவ்வலைவாசல் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய வலைவாசல்களில் ஒன்று.
Wikipedia
Wikipedia

பார்வதிசிறீ, இலக்கியத்துக்கான வலைவாசல் அழகாக வந்துள்ளது. இனி சரியான தலைப்புக்கு நகர்த்தலாம்.--Kanags \உரையாடுக 13:32, 27 ஏப்ரல் 2013 (UTC)

👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:45, 27 ஏப்ரல் 2013 (UTC)

பாராட்டுகள்[தொகு]

அன்புள்ள பார்வதிசீர், வாழ்த்துக்கள்.

விக்கிப்பீடியா வலைவாசல் இலக்கியம் ஆய்வாளர்களுக்கு உதவும் பாங்கில் அமைந்துள்ளது.
பாராட்டுகள்.
விக்கிப்பீடியா முதற் பக்கம் அவ்வப்போது கட்டுரைகளை முதன்மைப்படுத்திக் கட்டுரையாளர்களுக்கு ஊக்கம் தரும் பகுதியாக அமைந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
தொகுப்பாய்வுக்குப் பயன்படும் வகையில் அதில் விக்கிப்பீடியா கட்டுரைகளின் அடியில் பகுப்பு காட்டப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியங்களை மட்டும் தொகுத்து ஓரிடத்தில் காண முடியவில்லையே என்னும் ஏக்கத்தை இது போக்கியுள்ளது.
உருவாக்கிய பார்வதிசீர் பாராட்டுக்கு உரியவர்.

இப்போது உள்ள அமைப்பு[தொகு]

  • வரவேற்பு,
  • சிறப்புக் கட்டுரை
  • இலக்கிய வகைகள்
  • சிற்றிலக்கியங்கள்
  • தமிழ் இலக்கியம்
  • இலக்கிய விருதுகள்
  • சிறப்புப்படம்
  • இலக்கியம் குறித்த பகுப்புகள்
  • நீங்களும் பங்களிக்கலாம்
  • பிற விக்கிமீடியத் திட்டங்கள்

என்னும் பாகுபாடுகளை இது கொண்டுள்ளது.

இந்தத் தலைப்புகள் விக்கிப்பீடியா தளத்தில் உள்ள பகுப்புத் தலைப்புகளைத் தொகுத்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ளன.
“இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்”
இதுதான் முறை.

என்றாலும்

ஒரு வேண்டுகோள்[தொகு]

மேலே கண்ட பகுப்புக்களில்

  • மாறும் பகுதிகள் – சிறப்புக் கட்டுரை, சிறப்புப் படம்
  • மாறாமல் வளரும் பகுதிகள் – இலக்கிய வகைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் இலக்கியம், இலக்கிய விருதுகள்

இவற்றில் மாறும் பகுப்புகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
மாறாப் பகுப்புகளின் பாகுபாடுகள் தான் சீரமைக்கப்படுதல் வேண்டும்.
எப்படிச் சீரமைப்பது.
தமிழறிஞர்கள் பலர் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
அவற்றைப் பின்பற்றுவதே குழப்பம் இன்றி அமைய வழி உண்டாக்கும்.

குழப்பங்கள்[தொகு]

  • சமய இலக்கியங்கள் – சைவம், வைணவம், சமணம், முகமது, கிறித்தும் போன்றவை ஓரடுக்கில் வரவேண்டாமா?

இப்போது வெவ்வேறு அடுக்குகளில் சிதைந்துள்ளன.
காரணம் பகுப்பு வேரில் தனிச் செடிகள் முளைப்பதுதான்.

அறிஞர்கள காட்டிய வழி[தொகு]

இலக்கியம் பொது நோக்கு

  • சங்கநூல்
  • போற்றிப் பாடல்கள்(பக்தி) சமய நூல்கள்
  • காப்பியம்(=காவியம்), சிற்றிலக்கியங்கள்
  • இலக்கணம்
  • உரைநூல்
  • உரைநடை
  • இசைப் பாடல்கள் (நாட்டுப்புறப் பாடல்க்ள்)
  • கவிதை

இந்த 8 பகுப்புகள் போதுமானவை. இவற்றைப் படிமம் ஆக்குதல் நன்று. இலக்கிய வகைகள் என்னும் பகுப்பினை நீக்கிவிட்டு இதனை இட வேண்டும்.

மேலும் செய்யும் பகுப்புகள்
நீங்கள் உருவாக்கியிருப்பது போலவும்,
கட்டுரையாளர நோக்கிலும் அமையலாம்.
அவை உட்பிரிவுப் பகுப்புக்களாக் காட்டப்படின் போற்றலாம்.
இன்றேனும் குறையில்லை.

ஆளுமை[தொகு]

இலக்கிய வலைவாசல் ஓர் ஆளுமைப் பிரிவு.
கட்டுரையாளர்களின் பங்கு இதில் ஏதும் இல்லை.
நல்லாட்சி நடக்க வாழ்த்துக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 21:44, 27 ஏப்ரல் 2013 (UTC)

மேலும் ஒரு வேண்டுகோள்

  • நபர்கள் என்று உள்ள சொல்லை நன்மக்கள் என மாற்றுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 22:07, 27 ஏப்ரல் 2013 (UTC)

சிறிய பரிந்துரை[தொகு]

பார்வதிசிறீ.. சிற்றிலக்கியங்கள், தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கியவிருதுகள் ஆகிய தலைப்புகளின் கீழ் பகுப்புகள் இல்லாமல், அதனைச் சேர்ந்த இலக்கியங்களின் அறிமுகங்களை தரலாம். இன்னும் சிறப்பாக இருக்கும்.--அராபத் (பேச்சு) 06:31, 30 ஏப்ரல் 2013 (UTC)