வலைவாசல் பேச்சு:கட்டுரைப்போட்டி/வேண்டுகோள்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan
மயூரநாதன் அய்யா
வேண்டுகோள்
- உலகின் பல பகுதிகளில் உருவாகும் பல்துறை அறிவுத் திரள்களை தமிழில் தொகுத்தளிக்கும் முயற்சியில் தமிழ் விக்கிப்பீடியா சிறப்பாக பங்காற்றி வருகிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் வழியான தமிழ் மொழி வளர்ச்சிப் பயணத்தில் கட்டுரைப் போட்டி வழியாகப் பங்கேற்க வந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறோம். அனைத்துத் துறைகளிலுமான அறிவுத் திரள்கள் குறித்து உரையாடும் போதும், பேசும் போதும் தமிழைப் பயன்படுத்தி தமிழை முதன்மை மொழியாக்க முன் வர வேண்டும். அத்துடன் இந்த போட்டிக் கட்டுரை ஒன்றுடன் நின்று விடாமல் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களில் ஒருவராக தங்களைப் பதிவு செய்து கொண்டு தங்கள் துறை சார்ந்த கட்டுரைகள், தங்கள் விருப்பமுள்ள பிற துறை சார்ந்த கட்டுரைகள் போன்றவற்றைத் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்து தமிழ் மொழியிலான விக்கிப்பீடியாவினை முதன்மையாக்க தங்களின் தொடர் ஒத்துழைப்பை நாடுகிறோம்.
மேற்கண்டவாறு செய்தி இருந்தால் நன்றாக இருக்குமென்று கருதுகிறேன். தாங்கள் விரும்பினால் மேற்கண்ட செய்தியை தங்கள் செய்தியுடன் இணைத்தோ அல்லது மாற்றம் செய்தோ வெளியிட வேண்டுகிறேன். - தேனி.எம்.சுப்பிரமணி.
- சுப்பிரமணி, உங்களுடைய பத்தியை அப்படியே போட்டிருக்கிறேன். பார்க்கவும். மயூரநாதன் 18:14, 16 மார்ச் 2010 (UTC)