வலைவாசல் பேச்சு:கட்டுரைப்போட்டி/விதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரைப்போட்டி/விதிகள்[தொகு]

"கட்டுரை 250 சொற்களுக்குக் குறையாமலும் 500 சொற்களுக்கு அதிகமாகாமலும் இருக்க வேண்டும்" என்பதில் 500 சொற்களுக்கு மிகாமல் என்பதை நீக்கிவிடலாமா? குறைந்தபட்சம் 250 சொற்கள் தேவை என்பதை மட்டும் வழியுறுத்தினால் போதுமே? --குறும்பன் 02:29, 6 மார்ச் 2010 (UTC)

பல கட்டுரைகளின் தரத்தை ஒப்பிட அவற்றின் நீளம் ஒரே போல் இருந்தால் நன்று அல்லவா? தவிர, வலைவாசல்:கட்டுரைப்போட்டி/விதிகள் பகுதியில் காணப்படும் விதிகள் இறுதி விதிகளாகப் போட்டிக் கூட்டாளிக்குப் பரிந்துரைக்கப்பட்டுதான் பெரிதாக மாற்ற முடியுமா தெரியவில்லை. . --ரவி 03:27, 6 மார்ச் 2010 (UTC)

துறைசார் கட்டுரைகள் அத்துறை பயிலும் மாணவர்களுக்கே பங்கேற்க விதிக்கப்பட்டுள்ளது. இது போட்டியின் வீச்சைக் குறைக்கும் அபாயம் உள்ளது. காட்டாக, தற்போது சட்டம் பயிலும் மாணவர் நல்ல அடிப்படை பொறியியல் கட்டுரைகளைத் தர இயலலாம். தவிர விளையாட்டுக் கல்வி என்று எந்த பல்கலைக்கழகம் தமிழகத்தில் உள்ளது ? இதனை சற்றே கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்.--மணியன் 03:39, 6 மார்ச் 2010 (UTC)

இத்தயக்கம் எனக்கும் இருக்கிறது. இதை மற்றொரு விதமாகவும் பார்க்கலாம். கட்டுரைகளை துறை சார் மாணவர்களே எழுதுவதால் கட்டுரைகளின் நம்பகத்தன்மை, வீச்சு கூடும். எல்லாரும் எல்லா தலைப்புகளிலும் எழுதலாம் என்றால் ஒரு சில எளிமையான தலைப்புகளில் மட்டும் பலரும் எழுதி, வரும் கட்டுரைகளின் துறைப் பரப்பும் குறையலாம்--ரவி 06:40, 6 மார்ச் 2010 (UTC)

இன்னொரு காரணம், ஒவ்வொரு துறை பல்கலைக்கும் மூன்று பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஒரு பேச்சுக்கு எல்லா துறை கட்டுரைகளையும் ஒரு பல்கலையைச் சேர்ந்த மாணவர்களே வெல்லும் நிலை வந்தால் மற்ற பல்கலைகளுக்குப் பரிசே இல்லாமல் போகலாம். பல்கலை வாரியாக பரிசு அளிக்கும் போது அந்தந்தத் துறை கட்டுரைகளுக்குத் தருவதே நன்றாக இருக்கும். மருத்துவக் கல்லூரி மாணவருக்குச் சட்டக் கட்டுரை பற்றி பரிசும் விளையாட்டுத் துறை மாணவருக்குப் பொறியியல் கட்டுரைக்கான பரிசும் வந்தால்...?? எனவே, நடைமுறை காரணங்களுக்காக இவ்விதி ஒத்து வரும் என்று நினைக்கிறேன்.--ரவி 07:37, 6 மார்ச் 2010 (UTC)

இப்பல்கலைக் கழகத்தின் கீழ் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளைக் கொண்ட 4 கல்லூரிகளும், இளநிலைப் பட்டப்படிப்புகளை மட்டும் கொண்ட 8 கல்லூரிகளும் உள்ளன. இது தவிர அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகத்தில் விளையாட்டுக் கல்விக்காகத் தனித்துறை ஒன்றும் உள்ளது. விளையாட்டுக் கல்வி என்று பிரிவு ஒன்று தேவையா என்று ஒதுக்கி விட முடியாது. விளையாட்டில் எத்தனையோ கட்டுரைகள் எழுதப்படலாம். விளையாட்டு வீரர்கள் குறித்தும் கூட கட்டுரைகள் எழுதப்படலாம். --Theni.M.Subramani 07:27, 6 மார்ச் 2010 (UTC)

தகவல் புதிது. நன்றி--ரவி 07:37, 6 மார்ச் 2010 (UTC)