வலைவாசல் பேச்சு:கட்டுரைப்போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மயூரநாதன் மிக அருமையாக இந்தப் பக்கத்தை அமைத்துள்ளார். --செல்வா 04:31, 9 மார்ச் 2010 (UTC)

பெயர்வெளித்தலைப்பில் பிழை[தொகு]

ஏன் இப்பக்கத்தின் தலைப்பு பேச்ச என்று வருகின்றது பேச்சு என்று அல்லவா இருக்க வேண்டும்?--செல்வா 04:32, 9 மார்ச் 2010 (UTC)

பேச்ச என்று வருவது எழுத்துப் பிழை. சரி செய்ய பக்சில்லாவில் வழு அறிக்கை பதிய வேண்டும் என நினைக்கிறேன்--ரவி 09:40, 17 மார்ச் 2010 (UTC)
இது குறித்து விக்கிப்பீடியா:வழு நிலவரங்கள் பக்கத்தில் முன்பு சொல்லியிருந்தேன். இப்போது இதற்கென வழு ஒன்றைப் பதிந்துள்ளேன். பக்சில்லாவில் கணக்கு உள்ளவர்கள் அங்கு சென்று இதற்கு முன்னுரிமை தர வாக்களியுங்கள். -- சுந்தர் \பேச்சு 04:53, 5 ஏப்ரல் 2010 (UTC)
இந்த வழு சரி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதை ஒட்டிப் புதிய வழு ஒன்று வந்துள்ளது. அதை இங்கே பதிந்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 04:50, 17 ஏப்ரல் 2010 (UTC)
இது வழு அல்ல, இற்றைப்படுத்தல் இடைவெளியினால் ஏற்பட்டது. தீர்ந்துள்ளது. -- சுந்தர் \பேச்சு 07:08, 17 ஏப்ரல் 2010 (UTC)

வலைவாசல் முதற் பதிப்பு[தொகு]

இந்த வலைவாசலை நாளை காலைக்குள், ஒரு முதற் பதிப்பு போல நிறைவு செய்ய இயலுமா? விக்கிக்கு வருகிற மாணவர்களை எவ்வாறு வழிப்படுத்துவோம் என்று தெளிவாக எடுத்துரைக்க வேண்டி இருக்கிறது. வலைவாசலை இன்னும் கூட சுருக்கமாக, சில பெட்டிகள் நீக்கிச் செய்தால் நன்றாக இருக்கும். அலைச்சலில் இருப்பதால் என்னால் நேரடியாக ஈடுபட முடியவில்லை :( நன்றி--ரவி 09:40, 17 மார்ச் 2010 (UTC)

முதற்பதிப்பு சிறப்பாக உள்ளது.பிற விக்கிப் பக்கஙளைப் போல உள்ளிணைப்புகள் தரலாமா ?--மணியன் 23:54, 26 மார்ச் 2010 (UTC)

ஆம், தாராளமாக உள்ளிணைப்புகள் தரலாம்--ரவி 06:37, 30 மார்ச் 2010 (UTC)

தலைப்புப் படிமம்[தொகு]

தற்போது தலைப்பில் உள்ள நீலம், சிகப்பு எழுத்துகள் பின்னணி நிறத்துடன் அவ்வளவு ஒத்துப் போகவில்லை. sitenoticeல் உள்ளது போல் மணல்நிறப் பின்னணியில் கருப்பு எழுத்துகள் நன்றாக இருக்கும். அல்லது, ஆரஞ்சுநிற ஒளிரும் படமும் நன்றாக இருந்தது--ரவி 06:37, 30 மார்ச் 2010 (UTC)

ஆரஞ்சுநிற ஒளிரும் படத்தையே இடுவோம். மாற்றிவிடுகிறேன். மயூரநாதன் 18:48, 30 மார்ச் 2010 (UTC)

[தொகு]

ஐயா வணக்கம்! மயூரநாதன் அவர்களுக்கு என் உளம்நிறைந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! அருமையான, கவர்ச்சியான அமைப்பு. அது இன்னும் செப்பமாக அமைய ஓரிரு கருத்துக்கள்:

வலைவாசல் கட்டுரைப்போட்டி பற்றிய அறிவிப்பில், சிலபிழைகள் உள்ளன. ஒற்றுப்பிழைதான். அவற்றைத் திருத்திவெளியிட வேண்டுகின்றேன்.

1. போட்டி அறிவிப்பு- வரி 2 இல் 'இதனை ஒட்டி தமிழ்நாட்டிலுள்ள' என்று உள்ளது, 'ஒட்டித் தமிழ்..' என இருக்கவேண்டும்.

2. ஐயங்களைத்தீர்த்துக்கொள்ள எனும் பெட்டிச்செய்தியில் 4 ஆவது வரி: 'தொகுப்பது பற்றிய அறிய' என்றுள்ளது, 'தொகுப்பது பற்றி அறிய' என இருத்தல் சிறப்பு.

3. 7 ஆம்வரியில், உங்கள'து' என்பது, 'உங்கள்' என்றிருப்பின் நன்று.(ஐயங்'கள்' எனப்பின்னர் வருவதால்; ஒருமை பன்மை மயக்கம்)

4. போட்டி விதிகள்: 6. 2 ஆம் வரியில், 'இங்கு தரப்பட்டுள்ள' என்பது, -இங்கு'த்' தரப்பட்டுள்ள- என ஒற்றுடன் இருக்கவேண்டும்.

5.வேண்டுகோள்: வரி 1 , - -திரள்களை தமிழில்- என்பது, -திரள்களைத் தமிழில்- என்று ஒற்றுடன் இருக்கவேண்டும்.

வரி 1 இன் கடைசியில், -சிறப்பாக பங்காற்றி- என்பது, 'சிறப்பாகப் பங்காற்றி' என்று இருப்பின் நன்று.

தங்களின் முயற்சியைக் குறை சொல்வதாகக் கருதவேண்டாம். அதனைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை! எழுத்துப்பிழை வருவது என்பது, இக்காலத் தமிழில் இயல்பான ஒன்றாகப் போய்விட்டது; ஆனால், விக்கிப்பீடியாவில் செம்மையாகப் பிழையின்றி எழுத முயற்சி செய்வோமே! --Meykandan 09:26, 30 மார்ச் 2010 (UTC)

பிழைகள் திருத்தப்பட்டுள்ளன. தங்களின் பின்னூட்டம் பலரும் காணவிருக்கும் இந்நேரத்தில் மிகவும் பயனுள்ளது. தங்களின் பணியைத் தொடருங்கள் !--மணியன் 11:05, 30 மார்ச் 2010 (UTC)

பாராட்டு[தொகு]

உத்தமம் அமைப்பின் மடற்குழுவில் தமிழ்மணம் காசி நமது வலைவாசலையும் ஏற்பாடுகளையும் "'அடேங்கப்பா' என்று சொல்லும் வகையில் உள்ளது" எனத் தெரிவித்தார். சில பின்னூட்டுகளைப் பின்னர் பகிர்வதாகச் சொல்லியுள்ளார். -- சுந்தர் \பேச்சு 04:57, 5 ஏப்ரல் 2010 (UTC)

பரப்புரை[தொகு]

கட்டுரைப் போட்டி பற்றிய இன்னும் கூடிய விளம்பரம், விழிப்புணர்வு தேவைப்படுகிறது. வலைப்பதிவு, டுவிட்டர், குழுமங்கள், மன்றங்களில் ஈடுபாடுள்ள நண்பர்கள் போட்டி பற்றி எழுத வேண்டிக் கொள்கிறேன். தங்கள் நண்பர்களையும் இது பற்றி எழுதி போட்டி வலைவாசலுக்குத் தொடுப்பு கொடுக்க வேண்டுகிறேன்.--ரவி 06:36, 6 ஏப்ரல் 2010 (UTC)

போட்டி பற்றிய உரையாடல்கள்[தொகு]

போட்டி பற்றிய உரையாடல்களை ஆலமரத்தடியில் இடாமல் இங்கு இட்டால் பிற்காலத்தில் தொகுக்க இலகுவாக இருக்கும். ஆலமரத்தடி உரையாடல்கள் சிதறிப் போகின்றன. நன்றி--ரவி 06:36, 6 ஏப்ரல் 2010 (UTC)

மாணவர்களுக்கு அனுப்பும் மின்மடல்கள்[தொகு]

போட்டிக்குப் பதிவு செய்த பிறகு மாணவர்களுக்கு அனுப்பும் மின்மடலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. தேவையான மாற்றங்களை இங்கு இட்டுள்ளேன். உங்கள் கருத்துகளையும் தெரிவித்தால் அவற்றைத் தொகுத்து தளம் வடிவமைக்கும் மாணவரான யுவராசுக்கு அனுப்பி வைக்கலாம்.

1. மின்மடல் அனுப்புனர் முகவரி anna university trichy என்று உள்ளது. இது Wiki pages contest அல்லது இந்தப் போட்டியை நினைவூட்டும் சரியான பெயரில் இருக்க வேண்டும்.எல்லா கருவிகளிலும் பார்க்கும் வண்ணம் இது ஆங்கிலத்திலேயே இருக்கட்டும்.

2. தற்போது மடலின் உள்ளடக்கம்

//உலகத் தமிழ் இணைய மாநாடு 2010 தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கட்டுரைப் போட்டிக்கு தங்களை வரவேற்கின்றோம்.

திட்டப்பணி குறியீடு :TEC6207 ரகசியக்குறியீடு : password here

//

என்று இருக்கிறது. இது பின்வருமாறு இருக்க வேண்டும்.

உலகத் தமிழ் இணைய மாநாடு 2010

தமிழ் விக்கிப்பீடியாவுக்கான தகவல் பக்கங்கள் போட்டிக்கு தங்களை வரவேற்கின்றோம். நீங்கள் உருவாக்கிய திட்டப்பணிக் கணக்கு வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

திட்டப்பணி குறியீடு :TEC6207 ரகசியக்குறியீடு : password here

என்ற விவரம் கொண்டு http://tamilint2010.tn.gov.in/ தளத்தில் நுழைந்து உங்கள் தகவல் பக்கங்களைப் பதிவேற்றலாம்.

1. ஏப்ரல் 30, 2010 க்குள் தகவல் பக்கங்களைப் பதிவேற்ற வேண்டும்.

2. தகவல் பக்கங்களின் தலைப்பும், உள்ளடக்கமும் முழுக்கத் தமிழில் இருக்க வேண்டும். ஆங்கிலப் பக்கங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

3. தகவல் பக்கங்கள் Unicode எழுத்துருவில் இருக்க வேண்டும். .doc அல்லது .odt கோப்புகளாக அனுப்ப வேண்டும். தமிழில் எழுத http://software.nhm.in/products/writer மென்பொருள் பயன்படுத்தலாம். தமிழ்த் தட்டச்சு குறித்து மேலும் அறிய http://ta.wikipedia.org/wiki/Wp:tamil typing பார்க்கவும்.

4. என்னென்ன தலைப்புகளில் எழுதலாம், விதிமுறைகள் என்னென்ன, தகவல் பக்கங்களை எழுதுவது எப்படி போன்ற வழிகாட்டல்களுக்கு http://ta.wikipedia.org/wiki/Wp:contest பாருங்கள். தகவல் பக்கங்களை அனுப்பும் முன் இங்குள்ள வழிமுறைகளை அறிந்து கொள்வது நன்று.

(பிறகு மேற்கண்ட வழிகாட்டல்களை ஆங்கிலத்திலும் ஒரு முறை எழுத வேண்டும். எல்லா கருவிகளில் இருந்தும் படிக்க ஏதுவாக)--ரவி 07:17, 6 ஏப்ரல் 2010 (UTC)

போட்டி குறித்த நாளிதழ் விளம்பரம்[தொகு]

போட்டி குறித்து நாளிதழ் விளம்பரம் ஒன்று செய்யும் வாய்ப்பு உண்டு. இவ்விளம்பரத்துக்கு ஏற்கனவே இங்கு உள்ள விளம்பர அறிவிப்புப் படிமத்தையே தரலாமா? அல்லது, இதில் மாற்றங்கள் தேவையா? முற்றிலும் புதிய அறிவிப்பு வடிவமைப்பு என்றால் அதற்கு நேரமும் உழைப்பும் தேவைப்படும் என்பதையும் கருத்தில் கொள்க :) --ரவி 07:20, 6 ஏப்ரல் 2010 (UTC)

கட்டுரைப் போட்டி நிலவரம்[தொகு]

கட்டுரைப் போட்டிக்கு இது வரை 200+ பதிவுகளும் 18 கட்டுரைகளுமே வந்துள்ளன. பதிவாகியுள்ள தலைப்புகளில் பல கலைக்களஞ்சித்துக்குப் பொருந்தா நிலையில் உள்ளன. கட்டுரைகளின் எண்ணிக்கை, கலைக்களஞ்சியப் பொருத்தம், உள்ளடக்கத் தரம் ஆகியவற்றைக் கூட்ட என்ன செய்யலாம்?--ரவி 07:23, 6 ஏப்ரல் 2010 (UTC)

கட்டுரை முன்தேர்வு[தொகு]

கட்டுரைகளில் முன்தேர்வு செய்து தரமான கட்டுரைகளை மட்டும் நடுவர்களுக்கு அனுப்பும் முறை பற்றி விக்கிப்பீடியா_பேச்சு:கட்டுரைப்_போட்டி_முன்தேர்வு என்ற பக்கத்தில் உரையாடி முடிவெடுக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 08:02, 6 ஏப்ரல் 2010 (UTC)

போட்டி விதிகளில் மாற்றம்[தொகு]

நாம் தெரிவித்த ஆலோசனைகளை அடுத்து, போட்டி விதிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து இன்றைய தினந்தந்தி நாளிதழில் கால் பக்க விளம்பரம் வெளிவந்துள்ளது.

  • போட்டியில் கல்லூரி மாணவர் உட்பட பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம். எனவே, உலகத் தமிழர் அனைவரும் பங்கேற்கத் தடை இல்லை. இச்செய்தியைப் பரப்ப வேண்டும் (குழுமங்கள், மன்றங்கள், வலைப்பதிவுகள்...)
  • போட்டி முடிவுத் தேதி மே 15.--ரவி 15:05, 18 ஏப்ரல் 2010 (UTC)