வலைவாசல் பேச்சு:ஊடகப் போட்டி/விதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனி மனித அந்தரங்கம்/இரகசியம்[தொகு]

சில படங்களைப் பார்க்கும்போது தனி மனித அந்தரங்கம்/இரகசியம் மீறாத வகையில் கோப்புகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுத்தால் நன்றாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது.

முகப்புப்பக்கத்திலுள்ள 'தமிழ் விக்கி ஊடகப் போட்டி' பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள யாழ்ப்பாண சாலைக் காட்சி, புகைப்பட்ட நன்னெறி விதிக்குட்பட்டதாக அமையாதது போன்று உள்ளது என்பது என் பணிவான கருத்து. அதற்கான காரணங்கள்:

  1. பெண்கள் (ஆண்கள் உட்பட) அனுமதியின்றி அவர்களை புகைப்படமெடுக்கக் கூடாது. குறிப்பாக அடையாளம் தெரியும் விதத்தில் அனுமதியின்றி பிரசுரிக்கக் கூடாது. தமிழர்களின் கலாச்சார, பண்பாடும் இங்கு கவணிக்கத்தக்கன.
  2. வாகனத்தின் இலக்கமும் அதன் ஓட்டுனரும் (பயணியும்) அடையாளம் காணக் கூடியவாறு உள்ளன.
  3. புகைப்படக் கலைஞர் தான் படம் எடுத்தவிதம் பற்றிக் குறிப்பிட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. // I'm that photographer shot through car windscreen.//

தனி மனித உணர்களைப் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இதுபற்றிய புரிதல் இடத்துக்கு இடம், பண்பாட்டுக்கு பண்பாடு மாறக்கூடியது. அடையாளம் குறித்த இறுக்கமான விதிகளை ஒரே சீராக இவ்வாறு விதிக்க நாங்கள் விரும்பவில்லை. ”தமிழர்களின் பண்பாடு” என்பது பொது அம்சமாக அனைத்து இடங்களிலும் ஒரே போல் இருப்பதில்லை. சில இடங்களில் பெண்களைப் புகைப்படம் எடுப்பதே நன்னெறி என்று கருதுவோரும் உளர், சில இடங்களில் வாகன இலக்கம் வெளிப்படையாகத் தெரிவது மட்டும் நன்னெறி இல்லை என்று கருதுவோரும் உளர். பொதுவாக விக்கித்திட்டங்களில் தணிக்கை என்றொரு கோட்பாடு கிடையாது. போட்டியிலும் தமிழர் புகைப்படங்கள் சேர்க்கலாம் என்றே குறித்துள்ளோம். Freedom of Panorama, Personality Rights, privacy concerns ஆகியவை இடத்துக்கு இடம், சூழலுக்கு சூழல் மாறுபடக்கூடிய விசயங்கள். பொதுமை பேணல் கடினம். எனவே போட்டிக்கும் இப்படி எடுக்ககூடாது என்று விதிக்க விரும்பவில்லை. கல்வி நோக்கில் பயன்படக்கூடிய, முன்னர் கிடைக்காத எப்படமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வது என்று இருக்கவே விரும்புகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:25, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

விளக்கத்துக்கு நன்றி. --Anton 04:42, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]