வலைவாசல்:விளையாட்டுக்கள்/சிறப்புக் கட்டுரை/3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துடுப்பாட்டம், (மட்டைப்பந்து, Cricket, கிரிக்கெட்) 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஆட்டமாகும். தற்பொழுது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. இது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டு ஆகும். டெஸ்ட் போட்டிகளே துடுப்பாட்டத்தின் பாரம்பரிய ஆட்டமாகும். ஒரு டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு அணியும் இரு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இரு இன்னிங்ஸிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வென்றதாக கருதப்படும். இதேபோல ஒருநாள் போட்டிகளும் இருபது 20 போட்டிகளும் துடுப்பாட்டத்தின் வேறுசில வகையான போட்டிகளாகும்.