வலைவாசல்:விளையாட்டுக்கள்/சிறப்புக் கட்டுரை/1
Appearance
தமிழர்களால் மரபு வழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்கள், அல்லது பரவலாக விளையாடப்படும் விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுகள் ஆகும். இதில் பல விளையாட்டுக்கள் தென்னிந்தியாவில் பரவலாக விளையாடப்படுவை. மேலும் பல உலகமெங்கும் விளையாடப்படுபவை. மட்டைப்பந்து, உதைப்பந்து என தெளிவாக வெளி நாடுகளில் தோன்றிய அனைத்துலக விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுக்களுக்குள் வகைப்படுத்தபடவில்லை. இவற்றை பலவேறு பண்புகளின் அடிப்படைகளில் வகைப்படுத்தலாம். தமிழர் விளையாட்டுக்களில் மிகவும் பிரபலமானவை கிளித்தட்டு, மாட்டு வண்டிச் சவாரி, ஜல்லிக்கட்டு மற்றும் சிலம்பம் போன்றவையாகும்.