வலைவாசல்:மின்னணுவியல்/சிறப்புக்கட்டுரை/2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயற்பியல் பாட வகுப்பில் காண்பிக்கப்படும் ஒரு மின்னழுத்தமானி

மின்னழுத்தமானி (Voltmeter) என்பது ஒரு மின்சுற்றில் உள்ள இரண்டு புள்ளிகளுக்கிடையில் காணப்படும் மின்னழுத்த வேறுபாடுகளை அளக்கும் கருவியாகும். ஒப்புமை மின்னழுத்தமானிகள் மின் சுற்றில் அறியப்படும் மின்னழுத்தத்திற்கு ஏற்றாற்ப் போல் ஒரு முள்ளை வரையறுக்கப்பட்ட ஒப்பளவின் மீது நகர்த்தும். எண்முறை மின்னழுத்தமானிகளில் ஓர் ஒப்பிலக்க மாற்றி இருக்கும். அதன் பயனால் மின்னழுத்தத்தை எண்களாக காட்சிப்படுத்தும்.

மின்னழுத்தமானி பல வடிவங்களில் உருவாக்குகின்றனர். மின்னழுத்தத்தைக் கண்காணிக்க மின்னியற்றிகளில் நிரந்தரமாக மின்னழுத்தமானிகள் பொருத்தப்படுகின்றன. பொதுவாக மின்னியல் மற்றும் இலத்திரனியல் வேலைகளில் பலகூறளவி போன்ற கையடக்க மானிகளைத் தான் பயன்படுத்துவார்கள். பலகூறளவி பயன்படுத்த எளிதாக இருப்பதினால் இது வழக்கமான சோதனைக் கருவியாக மாறியது. எந்த ஒரு அளவையையும் மின்னழுத்தமாக மாற்றவும், அளவுகளை திருத்தவும் செய்கின்றது. உதாரணமாக, அழுத்தம், வெப்பம், இரசாயன ஆலைகளில் உள்ள செயல்முறை நிலைகள், அளவுகள் போன்றவற்றை தகுந்தபடியாக கண்காணிக்க முடிகிறது.