வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/16

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈஸ்டர் தீவு என்பது பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள பொலினீசியத் தீவாகும். இது சிலியின் ஆளுகைக்கு உட்பட்ட சிறப்பு மண்டலம் ஆகும். ஈஸ்டர் தீவு உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட குடியேற்றத் தீவுகளில் ஒன்றாகும். இது சிலியில் இருந்து 3,600 கிமீ மேற்கே அமைந்துள்ளது. ராப்பானூயி மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவின் சிறப்பாகும். இது உலகப் பாரம்பரியக் களமாகும். மனித முகம் போல் தோற்றமுடைய பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன, உயரம் சராசரியாக 10 மீட்டர், எடை 80 தொன். ஒரு மர்மமான கற்கால நாகரீகத்தின் நினைவாக எஞ்சியிருப்பது மோவய்கள் தவிர ஒன்றுமில்லை. முன்னூறுக்கும் மேற்ப்பட்ட மொவய்கள் பல்வேறு நிலைகளில் இன்றும் காணப்படுகின்றன. மூதாதையர்களின் வாழும் முகங்கள் இதைத்தான் மொவய்கள் குறிக்கின்றது. இந்த மோவய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்).