வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/19

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜஸ்பிரித் ஜஸ்பிர் சிங் பும்ரா(Jasprit Jasbir Singh Bumrah பிறப்பு: டிசம்பர் 6, 1993) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் விரைவு வீச்சாளர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய மூன்று துடுப்பாட்ட வடிவங்களிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு ஆண்டில் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். மொத்தம் 28 மட்டையாளர்களை வீழ்த்தி இந்தச் சாதனையினைப் புரிந்தார். இவர் நேர்க்கூர் வீச்சில்(yorker) திறமை வாய்ந்தவர்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் குசராத்து மாநில துடுப்பாட்ட அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2015-2016 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் புவனேசுவர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு மாற்று வீரராக இந்திய அணியில் இடம் பிடித்தார்.இதே தொடரில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் அதே அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். தற்போது ஐசிசியின் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டப் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடத்தில் உள்ளார்.