வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விடுதலைப் புலிகளின் சின்னம்

விடுதலைப் புலிகள் என அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் உள்ள, அரசுக்கு எதிரான ஒரு முக்கிய தமிழர் அமைப்பாகும். 1976 இல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, இலங்கையின் வட கிழக்கில் தமிழீழம் என்ற பெயரில், இலங்கைத் தமிழருக்கு என தனி நாடு அமைக்கக்கோரி செயல்படும் ஒர் அமைப்பு. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக வேலுப்பிள்ளை பிரபாகரன் மே 2009 வரை இயங்கினார். இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர்.