வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாடு‎[தொகு]

தமிழீழ சிறப்புக் கட்டுரை துனைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/வடிவமைப்பு.

Selected articles list[தொகு]

வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/1

போரில் கொல்லப்பட்ட சிறுவன் விஜயகுமார் தனுசன்.

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது. மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக 100 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/2

விடுதலைப் புலிகளின் சின்னம்

விடுதலைப் புலிகள் என அறியப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் உள்ள, அரசுக்கு எதிரான ஒரு முக்கிய தமிழர் அமைப்பாகும். 1976 இல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு, இலங்கையின் வட கிழக்கில் தமிழீழம் என்ற பெயரில், இலங்கைத் தமிழருக்கு என தனி நாடு அமைக்கக்கோரி செயல்படும் ஒர் அமைப்பு. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக வேலுப்பிள்ளை பிரபாகரன் மே 2009 வரை இயங்கினார். இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர்.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/3

யாழ்ப்பாணத் தீவு

யாழ்ப்பாண நகரம் இலங்கைத்தீவின் வட கோடியிலுள்ள ஒரு நகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந் நகரம், நீண்ட காலமாகவே நாட்டிலுள்ள இரண்டாவது பெரிய நகரமாக விளங்கி வருகிறது. 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை (அந்தஸ்த்தை) இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட போதும் பின்னர் வட மாகணத்தலைநகராக வவுனியாவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1981ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும், குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வந்தார்கள். சிங்களவர்கள் மிகவும் குறைவே. சமய அடிப்படையில் பார்த்தால் யாழ்நகரில், கிறீஸ்தவர்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/4
தமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுகூரும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/5

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் முகப்புத் தோற்றம்

நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளதூ. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/6

முத்துக்குமார்

ஈழத்தமிழருக்கு ஆதரவான தீக்குளிப்புகள் என்பது வன்னியில் இலங்கை அரசு நடத்தும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், உடனடியாக அங்கு போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் 2009 ஆம் ஆண்டில் தமிழகம், மலேசியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமிழர்கள் சிலர் தீக்குளிப்பு நடவடிக்கைகளில் இறங்கிய நிகழ்வுகளைக் குறிக்கும். தமிழ்நாட்டில் முதன் முறையாக 2009, சனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் என்ற தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்த நிகழ்வுகளால், தமிழ்நாட்டில் பதினைந்து பேர், மலேசியாவில் ஒருவர், சுவிட்சர்லாந்தில் ஒருவர் என மொத்தம் பதினேழு பேர் இதுவரை இறந்துள்ளார்கள்.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/7

புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சிறார்கள், கனடாவில் நடந்த ஒரு விழாவில்.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் தமிழர், இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழித் தமிழர் எனப்படுவர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து கொணர்ந்து குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும்பொருட்டே வம்சாவழித் தமிழர் எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது. இலங்கைத் தமிழர்கள், பண்பாடு மற்றும் மொழி அடிப்படையிலாக ஒரே ரீதியாகவிருந்த போதும், சிறு சிறு வேறுபாடுகளின் அடிப்படையில் அவர்களை யாழ்ப்பாணத் தமிழர், வன்னித் தமிழர், மன்னார் தமிழர், திருகோணமலை தமிழர், மட்டக்களப்புத் தமிழர், வடமேற்குத் தமிழர், கொழும்புத் தமிழர், வடமத்தியத் தமிழர் என பிரிக்கலாம்.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/8

இலங்கையின் தேசியக்கொடி

இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சமத்தவ குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது. முற்காலத்தில் இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம் (வழங்கிய வடமொழியில்), சின்மோன்டு, சேலான், தப்ரபேன் (கிரேக்கர்களால்), செரெண்டிப் (அராபியர்களால்) உட்பட மற்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட இத்தீவு, பின்னர் குடியேற்றவாத காலம் தொடக்கம் 1972 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு குடியரசாக அறிவிக்கப்படும் வரை சிலோன் என்று அழைக்கப்பட்டது. (தற்காலத்திலும் சிலசமயங்களில் சிலோன் என்பது பயன்படுத்த படுகிறது). அதன் அமைவின் காரணமாக "இந்து சமுத்திரத்தின் நித்திலம்" என்ற புகழும் இதற்கு உண்டு.


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/9

யாழ்ப்பாண குடாநாட்டில் சப்த தீவுகளின் அமைவு

இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள தீவுகலான லைடன் தீவு (வேலணைத்தீவு), புங்குடுதீவு, நயினாதீவு, காரைநகர், நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, மண்டைதீவு ஏழும் தீவுகள் சப்த தீவுகள் எனப்படும். இவற்றுள் லைடன் தீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை கடல்வழிச் சாலைகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன. ஏனைய நான்கு தீவுகளான எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு. இத்தீவுகளில் மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை, ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இடப் பெயர்களை வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென் இந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில் படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது


வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/10

யாழ்ப்பாண அரசு அதன் உச்சத்தில் கி.பி. 1350

யாழ்ப்பாண அரசு எனப்படுவது கிபி 13ம் நூற்றாண்டு முதல் 1620 வரை யாழ்ப்பாணத்தை மையாமாக கொண்டு இலங்கைத்தீவின் வட பகுதியை ஆண்டுவந்த அரச வம்சம் ஆகும். இது கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாத எதிர்வாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன. யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களில் ஒன்றான வையாபாடல் இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 என்று கூறுகிறது. இன்னொரு நூலான வைபவமாலை இவ்வரசு கி.பி. --- யில் தொடங்கியதாகச் சொல்கிறது. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 13ஆம் நூற்றாண்டில் கலிங்க மாகனின் படையெடுப்பு என்பன யாழ்ப்பாண அரசு உருவாவதற்கான களம் அமைத்துக் கொடுத்தன என்பது அவர்களது கருத்து.


முன்மொழிதல்[தொகு]

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் சிறப்புக் கட்டுரைகளின் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.